Home
Gadgets

43-inch முதல் 97-inch வரை.. கற்பனை செய்ய முடியாத விலை.. 6 வகை TV-களை அறிமுகம் செய்த LG நிறுவனம்!

இதற்கு முன்னர்.. ஒரு கம்பெனி, ஒரே நேரத்தில் ஓரிரு ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் எல்ஜி நிறுவனமானது ஒரே நேரத்தில் 6 வகையான பிரிவுகளின் கீழ் பல்வேறு அளவுகளுடைய 25 ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

எல்ஜி நிறுவனமானது 43 இன்ச் முதல் 97 இன்ச் வரை வெவ்வேறு அளவுகளின் கீழ் தனது புதிய நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏஐ ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. என்னென்ன பிரிவுகளின் கீழ் என்னென்னஸ்க்ரீன் சைஸ்களில் என்னென்ன மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? போன்ற விவரங்கள் இதோ:

43-inch முதல் 97-inch வரை.. 6 வகை TV-களை அறிமுகம் செய்த LG நிறுவனம்!

எல்ஜி நிறுவனம் அதன் 2024 சீரீஸில் எல்ஜி ஓஎல்இடி ஈவோ ஏஐ (LG OLED evo AI) மற்றும் எல்ஜி க்யூஎன்இடி ஏஐ (LG QNED AI) டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 வகையான துணை பிரிவுகள் உள்ளன. அந்த 6 துணை பிரிவுகளின் கீழ் மொத்தம் 25 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி ஓஎல்இடி ஈவோ ஜி4 ஏஐ (LG OLED evo G4 AI) பிரிவின் கீழ் 97-இன்ச், 77-இன்ச், 65-இன்ச் மற்றும் 55-இன்ச் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவிகளின் விலை நிர்ணயம் ரூ.2,049,990 முதல் தொடங்குகிறது.

எல்ஜி ஓஎல்இடி ஈவோ சி4 ஏஐ (LG OLED evo C4 AI) பிரிவின் கீழ் 83-இன்ச், 77-இன்ச், 65-இன்ச், 55-இன்ச், 48-இன்ச் மற்றும் 42-இன்ச் என மொத்தம் 6 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவிகளின் விலை நிர்ணயம் ரூ.1,19,990 முதல் தொடங்குகிறது.

எல்ஜி ஓஎல்இடி பி4 ஏஐ (LG OLED B4 AI) பிரிவின் கீழ் 77-இன்ச், 65-இன்ச் மற்றும் 55-இன்ச் என மொத்தம் 3 வெவ்வேறு ஸ்க்ரீன் சைஸ்களில் உள்ள ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவிகளின் விலை நிர்ணயம் ரூ.1,69,990 முதல் தொடங்குகிறது.

ஓஎல்இடி பிரிவை தொடர்ந்து எல்ஜி நிறுவனமானது அதன் க்யூஎன்இடி பிரிவின்கீழ் மீதமுள்ள ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி க்யூஎன்இடி மினி எல்இடி க்யூஎன்இடி90டி (LG QNED MiniLED - QNED90T) என்கிற பிரிவின் கீழ் 65-இன்ச் அளவுடைய ஒரே ஒரு மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.1,89,990 ஆகும்.

எல்ஜி க்யூஎன்இடி க்யூஎன்இடி88டி (LG QNED QNED88T) பிரிவின் கீழ் 75-இன்ச், 65-இன்ச், 55-இன்ச், 50-இன்ச் மற்றும் 43-இன்ச் மொத்தம் 5 வெவ்வேறு ஸ்க்ரீன் சைஸ்களில் உள்ள ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவிகளின் விலை நிர்ணயம் ரூ.1,03,990 முதல் தொடங்குகிறது.

கடைசியாக எல்ஜி க்யூஎன்இடி க்யூஎன்இடி82டி (LG QNED QNED82T) பிரிவின் கீழ் 75-இன்ச், 65-இன்ச், 55-இன்ச், 50-இன்ச் மற்றும் 43-இன்ச் மொத்தம் 5 வெவ்வேறு ஸ்க்ரீன் சைஸ்களில் உள்ள ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவிகளின் விலை நிர்ணயம் ரூ.62,990 முதல் தொடங்குகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஓஎல்இடி ஏஐ ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆனது மேம்படுத்தப்பட்ட ஏஐ திறன்களுடன் வரும், மேம்பட்ட படத் தரத்திற்காக துல்லியமான பிக்சல் அளவிலான பட பகுப்பாய்வுடன் கூடிய பின்னணியுடன், கூர்மையான பொருள்களுடன் கூடிய காட்சியமைப்பையும் வழங்கும்.

மறுகையில் உள்ள 2024 க்யூஎன்இடி ஏஐ ஸ்மார்ட் டிவிகள் ஆனது ஸ்க்ரீனில் பிரகாசமான மற்றும் துடிப்பான வண்ணங்களை வழங்கும் எல்சிடி தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை ஆகும். எல்ஜி நிறுவனத்தின் கூற்றுப்படி, எல்ஜி க்யூஎன்இடி டிவியின் ஏஐ திறன் படத் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் நம்பமுடியாத அளவிற்கு ஒலியின் குவிமாடத்தை உருவாக்கும் விர்ச்சுவல் 9.1.2 சரவுண்ட் சவுண்டுடன் "முழுமையான" ஆடியோவை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 inch to 97 inch New LG OLED evo and QNED Smart TV Models Launched in India Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X