அள்ளிக்கோங்க.. 40W ஸ்பீக்கர்கள்.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. மலிவு விலையில் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கி வருகின்றன. குறிப்பாக கம்மி விலையில் டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களை கம்மி விலையில் வாங்க நினைக்கும் பயனர்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது.
இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது மிகவும் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 43-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Thomson 9A Series Full HD LED Smart Android TV) மாடலுக்கு தான் பிளிப்கார்ட் தளத்தில் 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த 43-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது முன்பு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த டிவியை ரூ.15,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடி கிடைக்கும்.
இப்போது 43-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்பபோம். அதாவது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், புல் எச்டி ஆதரவு, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
ஏஆர்ம் கார்டெக்ஸ்-ஏ53 (ARM Cortex-A53) பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
இந்த 43-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக பயனர்களுக்கு மேம்பட்ட அம்சத்தை வழங்குகிறது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்.

43-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் ஆடியோ வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன். அதாவது இந்த ஸ்மார்ட் டிவி 40 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்களுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது 43-இன்ச் தாம்சன் டிவி. மேலும் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த ஸ்மார்ட் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








