யோசிக்காம வாங்குவீங்க.. வெறும் ரூ.19,999 போதும்.. 43 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?
கியூஎல்இடி டிஸ்பிளே, கூகுள் டிவி ஓஎஸ், டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, மீடியாடெக் சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், ஸ்மார்ட் ரிமோட், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பீரிமியம் பீச்சர்களை கொண்ட 43 இன்ச் தாம்சன் பீனிக்ஸ் கியூஎல்இடி டிவிக்கு (43 inch Thomson Phoenix QLED TV) கிடைக்காத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. பெசல்-லெஸ் டிசைன், எச்டிஆர்10பிளஸ் போன்ற மற்ற பீச்சர்களிலும் இந்த டிவி மிரளவிடுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
43 இன்ச் தாம்சன் பீனிக்ஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (43 inch Thomson Phoenix QLED TV Specifications): இந்த டிவியில் 43 இன்ச் (3840 × 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 60Hz ரெப்ஃரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இதுவொரு டால்பி விஷன் (Dolby Vision) டிஸ்பிளே மாடலாகும். மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), எச்எல்ஜி டெக்னாலஜி (HLG Technology), 1.1 பில்லியன் கலர் டெப்த் வருகிறது. ஆகவே, நேச்சுரல் கலர் டோன்கள் பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். பிரீமியம் வீடியோ அவுட்புட் கிடைக்கும். மல்டிபிள் வீடியோ மோட்களும் உள்ளன.
ஸ்போர்ட்ஸ் (Sports), கேம் (Game), விவிட் (Vivid) மற்றும் மூவி (Movies) ஆகிய வீடியோ மோட்களை பயன்படுத்தலாம். வீடியோவை போலவே ஆடியோவிலும் இந்த 43 இன்ச் தாம்சன் பீனிக்ஸ் கியூஎல்இடி டிவி மிரளவிட்டுள்ளது. டால்பி விஷன் வீடியோவுக்கு ஏற்ப டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio) சப்போர்ட் வருகிறது.
இதுபோக டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (dts TrueSurround), டால்பி எம்எஸ்12 (Dolby MS12), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) கொண்டிருக்கிறது. மொத்தமாக 40W ஆடியோ அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த டிவி ஆடியோவில் ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், மூவி மற்றும் மியூசிக் போன்ற மல்டிபிள் மோட்கள் வருகின்றன.
இந்த 43 இன்ச் தாம்சன் பீனிக்ஸ் கியூஎல்இடி டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மீடியாடெக் எம்டி9602 (MediaTek MT9602) சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும் மாலி ஜி52 (Mali G52) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி சப்போர்ட் உள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் வருவதால், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், குரோம்காஸ்ட், வாய்ஸ் அசிஸ்டன்ட் எனபில்ட் ரிமோட் கொடுக்கப்படுகிறது. அதேபோல கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆப் சப்போர்ட் வருகிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) போன்ற இன்பில்ட் ஆப்களும் கொண்டிருக்கிறது.
அதேபோல கூகுள் டிவி கிட்ஸ் மோட் (Google TV Kids Mode) வருகிறது. இந்த டிவியில் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), ப்ளூடூத் (Bluetooth), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi), ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி வருகிறது. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட் கொண்டிருக்கிறது. கேமிங் கன்சோல், ஏவி கேபிள் வருகின்றன.
இந்த 43 இன்ச் தாம்சன் பீனிக்ஸ் கியூஎல்இடி டிவிக்கு 1 வருட வாரண்டி வருகிறது. இந்த டிவியின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.19,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்டானது, எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications