Nokia Smart TV: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை களமிறக்கும் நோக்கியா.! முழுவிவரங்கள்.!
பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு 55-இன்ச் டிஸ்பிளே மற்றும் 4கே யுஎச்டி ரெசல்யூசன் வசதியுடன் நோக்கியா ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்த 55-இன்ச் நோக்கியா டிவி ஒரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா
இந்நிலையில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் மறுபடியும் இணைந்து புதிய 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே இது சார்ந்த டீஸரை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டெலிஜென்ட் டிம்மிங், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட்
விரைவில் வெளிவரும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், இன்டெலிஜென்ட் டிம்மிங், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் ஆண்ட்ராய்டு ஒஎஸ்
மேலும் நோக்கியாவின் 43-இன்ச் ஸ்மார்ட்டிவியில் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒஎஸ் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே இயக்கத்திற்கு வேகமாவும் பின்பு அருமையாகவும் இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலைப் பறறிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, இருந்தபோதிலும் ரூ.30,000-க்குள் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி சிறப்பம்சம்
நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி, அண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான ஆண்ட்ராய்டு டிவி இயக்க முறைமையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோர் உள்ளமைக்கப்பட்டிப்பதனால், பயனர்கள் தங்கள் டிவியில் கூடுதல் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நோக்கியா 55' இன்ச் ஸ்மார்ட் டிவி ப்யூர்எக்ஸ் குவாட் கோர் பிராசஸருடன் வருகிறது.

டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10
நோக்கியா நிறுவனம் தனது முதல் டிவியை 2.25 ஜிபி ரேம் விருப்பத்தில் வெளியிட்டுள்ளது. நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 போன்ற அம்சங்களுடன் பிரகாசமான, கூர்மையான மற்றும் தெளிவான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இது டால்பி ஆடியோ, டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் தொழில்நுட்பங்களால் மிரளவைக்கிறது.

இந்த நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி கூகிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் மற்றும் யூடியூபிற்கான ஹாட்ஸ்கிகளுடன் வருகிறது. இந்த நோக்கியா-பிராண்டட் டிவி சியோமி, மோட்டோரோலா, வு, இஃபால்கான், தாம்சன் மற்றும் பல முன்னணி ஸ்மார்ட் டிவிகளுடன் நேரடி போட்டியில் களமிறங்கியுள்ளது.

43-இன்ச் ஸ்மார்ட் டிவி
மேலும் விரைவில் வெளிவரும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலும், 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை போலவே பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்வே உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது நோக்கியா 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications