Home
Gadgets

8ஜிபி ஸ்டோரேஜ்.. 24W ஸ்பீக்கர்கள்.. சியோமி ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி விலைகுறைப்பு.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு எல்இடி டிவிக்கு (MI 5A Series Full HD Smart Android LED TV) தற்போது அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.35,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் அமேசான் தளத்தில் தற்போது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு எல்இடி டிவியை தற்போது ரூ.22.999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இந்த டிவியின் சிறப்பு அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

சியோமி ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி விலைகுறைப்பு.. எந்த மாடல்?

எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad core Cortex A55) உடன் இந்த அசத்தலான எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்டிவி மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக PatchWall மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் ஆதரவு உள்ளது. அதேபோல் பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த அட்டகாசமான எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டால்பி ஆடியோ ( Dolby Audio), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் (DTS Virtual: X) ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த சியோமி ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

சியோமி ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி விலைகுறைப்பு.. எந்த மாடல்?

டூயல் பேண்ட வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.௦, ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் அட்டகாசமான அம்சங்களுடன் சலுகை விலையில் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல் சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நேற்று இந்தியாவில் 43-இன்ச் 4கே ஃபயர் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. இந்த ஃபயர் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.24,999-ஆகும். குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 inch MI 5A Series Smart TV is 36 percent off on Amazon:check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X