இந்த 43-inch ஸ்மார்ட் டிவி இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும் போது இனி 32-inch டிவி எதுக்கு?

|

பிளிப்கார்ட் தளத்தில் சமீபத்தில் தான் விற்பனைக்கு வந்தது 43-இன்ச்Infinix 43Y1 Smart TV மாடல். தனித்துவமான இயங்குதளம், அருமையான மென்பொருள் மற்றும் பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி.

 ரூ.2000 தள்ளுபடி

ரூ.2000 தள்ளுபடி

குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் Infinix 43Y1 Smart TV மாடலின் விலை ரூ.14,990-ஆக உள்ளது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர உங்களது பழைய ஸ்மார்ட் டிவி எக்ஸ்சேஞ்ச் செய்யும் வசதி கூட உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.

இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!

பட்ஜெட் விலை

குறிப்பாக பட்ஜெட் விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்குவதை விட, அதே பட்ஜெட் விலையில் இந்த 43-இன்ச் Infinix 43Y1 Smart TV மாடலை வாங்குவது நல்லது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 10 சீரீஸ்: எச்டிஆர்10+ மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்ஸ் உடன் ஒப்பிட முடியாத டிஸ்பிளேக்கள்!ஒன்பிளஸ் 10 சீரீஸ்: எச்டிஆர்10+ மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்ஸ் உடன் ஒப்பிட முடியாத டிஸ்பிளேக்கள்!

ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே

ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே

Infinix 43Y1 ஆனது 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். மேலும் 1,920x1,080 பிக்சல்ஸ், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 178-degree viewing angle உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

465 நாட்கள் கடலுக்குள் கிடந்த போன்.. தானாகவே கரை ஒதுங்கியது.. எடுத்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்!465 நாட்கள் கடலுக்குள் கிடந்த போன்.. தானாகவே கரை ஒதுங்கியது.. எடுத்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்!

20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவி தெளிவான படங்களுக்கான HLG ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

சாவு பயத்த காமிச்சாட்டாங்க பரமா! 47 நிமிடங்கள் மரண பீதியில் உறைந்த NASA.. என்ன நடந்தது? எப்படி தப்பித்தது?சாவு பயத்த காமிச்சாட்டாங்க பரமா! 47 நிமிடங்கள் மரண பீதியில் உறைந்த NASA.. என்ன நடந்தது? எப்படி தப்பித்தது?

Linux இயங்குதளம்

Linux இயங்குதளம்

Linux இயங்குதளம் மற்றும் குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி31 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த Infinix 43Y1 மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி 4ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!

ஈரோஸ் நவ், ஹங்காமா

இந்த ஸ்மார்ட் டிவியில் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, ஆஜ் தக், சோனி LIV, ஈரோஸ் நவ், ஹங்காமா உள்ளிட்ட பல ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். அதேபோல் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இந்த ஸ்மார்ட் டிவியில் தெளிவாகப் பார்க்க முடியும்.

இதை விட ஒரு நல்ல சான்ஸ் இனி கிடைக்காது! முதல் முறையாக ரூ.60,000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்த iPhone 14!இதை விட ஒரு நல்ல சான்ஸ் இனி கிடைக்காது! முதல் முறையாக ரூ.60,000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்த iPhone 14!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வைஃபை, லேன், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், RF இன்புட், AV இன்புட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Infinix 43Y1 ஸ்மார்ட் டிவி.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
43-inch Infinix 43Y1 Smart TV is available at a discounted price on Flipkart: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X