Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட் ரூமுக்கு 1.. ரூ.12,999 க்கு 43-இன்ச் FHD LED ஸ்மார்ட் TV.. பிளிப்கார்ட்டில் ஆர்டர் அள்ளுது!

2025 இந்திய சுதந்திர தின சிறப்பு தள்ளுபடிகளில்.. எங்கு பார்த்தாலும்.. எல்லா பக்கமும் ஒரே ஸ்மார்ட்போன் ஆபர்களாகவும் , மொபைல் டிஸ்கவுண்ட்களாகவும் உள்ளது. ஆனால் நீங்கள் ஸ்மார்ட் டிவியை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? ஆம் என்றால், கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் ப்ரீடம் சேல் 2025 இன் கீழ் பல பிரபலமான ஸ்மார்ட் டிவிகள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக, பலரும் பரிசீலிக்கும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அவைகளில் நீங்கள் கண்டிப்பாக கருத்தில் கொள்ளக்கூடிய 4 டீல்கள் இதோ:

ரூ.12,999 க்கு 43-இன்ச் FHD LED ஸ்மார்ட் TV.. பிளிப்கார்ட்டில்!

ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் 43-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவிகளில் நம்பமுடியாத தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஷாவ்மீ (Xiaomi), தாம்சன் (Thomson), எல்ஜி (LG) மற்றும் பெஸ்டன் (Beston) போன்ற பிரபலமான பிராண்டுகளில் நீங்கள் 45 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்:

04. ஷாவ்மீ எம்ஐ எப் சீரீஸ் (Xiaomi Mi F Series): ஷாவ்மீ எம்ஐ எப் சீரீஸ்-ன் 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு (Xiaomi Mi F Series 43-inch Ultra HD 4K LED Smart TV) 41 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.42,999 ஆகும்.

ஆனால் இப்போது ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது டால்பி ஆடியோ மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. பையர் டிவி ஓஎஸ் (FireTV OS) கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் டிவியின் மீது கூடுதல் வங்கி தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கிறது

03. தாம்சன் பீனிக்ஸ்: அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் (Thomson Phoenix 43 inch Smart TV) விலை ரூ.31,999 ஆக இருந்தது. தற்போது பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2025 இன் கீழ் ரூ.19,999 க்கு வாங்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட் டிவியில் 37 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்த ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மாடல் ஆனது டால்பி அட்மாஸ் மற்றும் சக்திவாய்ந்த 40W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற ஈர்க்கக்கூடிய அம்சங்களை கொண்டுள்ளது, கூடுதலாக மற்ற வங்கி மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் உள்ளன.

02. எல்ஜி ஏஐ டிவி: எல்ஜி ஏஐ டிவி ஒரு பிரீமியம் ஆப்ஷன் ஆகும். இப்போது இது (LG AI TV 43 inch Smart TV) அதிக தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவியின் விலை முதலில் ரூ.48,690 ஆக இருந்தது, இப்போது ரூ.30,990 க்கு வாங்க கிடைக்கிறது.

அதாவது 36 சதவீதம் தள்ளுபடி பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி வெப் ஓஎஸ் (WebOS) ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குகிறது மற்றும் ஒரு அற்புதமான 4கே டிஸ்பிளேவிற்கான மேம்பட்ட ஆல்பா7 ஏஐ (Alpha7 AI) சிப்பையும் கொண்டுள்ளது.

01. பெஸ்டன் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி: மிகவும் கடுமையான பட்ஜெட்டில் இருப்பவர்களுக்கு, பெஸ்டன் நிறுவனத்தின் லேட்டஸ்ட் 43-இன்ச் எப்எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி (Beston 43 inch FHD LED Smart TV) ஆனது "கண்களை மூடிக்கொண்டு வாங்கும் ஆபர் விலையில்" கிடைக்கிறது. தற்போது இதை வெறும் ரூ.12,999 க்கு வாங்க முடியும்.

ஆகஸ்ட் 8 வரை நீளும் பிளிப்கார்ட் விற்பனையின் போது, பெஸ்டன் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது அதன் அசல் விலையான ரூ.23,999 இலிருந்து 45 சதவீத தள்ளுபடியை பெற்று ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மாடல் பல ப்ரீ இன்ஸ்டால்டு ஓடிடி ஆப்களுடன் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 inch FHD LED Smart TV For Just Rs 12999 and More Best TV Deals Flipkart Freedom Sale Ends Aug 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X