வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ரூ.25000 பட்ஜெட்ல 43 இன்ச் 4K டிவி.. டால்பி ஆடியோ.. 8GB மெமரி.. சாம்சங் டிவி பிளஸ்!
43 இன்ச் ஸ்மார்ட் டிவி பிரியர்களை அறக்க பறக்கும் விடும்படியான பட்ஜெட்டில் பெசல்-லெஸ் டிசைன், 4K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ், 20W டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, டைசன் ஓஎஸ், குவாட் கோர் சிப்செட், 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி போன்ற பக்கா பீச்சர்களுடன் குரோமா டைசன் ஓஎஸ் டிவி (Croma Tizen OS TV) இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த டிவியின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த டிவியில் டைசன் ஓஎஸ் வருகிறது. சாம்சங் டிவி பிளஸ் ஆப் சப்போர்ட் வருகிறது. 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் டிஸ்பிளே மாடல்களில் வெளியாகி இருக்கிறது. டால்பி ஆடியோ, ஃபிரேம்-லெஸ் டிசைன், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பக்கா பீச்சர்களை பட்ஜெட்டில் கவர் செய்துள்ளது. முதலில் விரிவான பீச்சர்களை பார்ப்போம்.

குரோமா டைசன் ஓஎஸ் டிவி அம்சங்கள் (Croma Tizen OS TV Specifications): இந்த குரோமா மாடலில் பெசல்-லெஸ் டிசைனுடன் ஏபிளஸ் (A+) கிரேடு பேனல் வருகிறது. டிஸ்பிளேவில் 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இதுவொரு 300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட எல்இடி (LED) டிஸ்பிளே மாடலாகும்.
1.07 பில்லியன் கலர் டெப்த் வருகிறது. ஆகவே, கலர் அக்கியூரசி பக்காவாக இருக்கும். மேலும், எச்டிஆர்1பிளஸ் (HDR 10+) மற்றும் எச்எல்ஜி (HLG) வருகிறது. டைனாமிக் (Dynamic), ஸ்டான்டர்ட் (Standard) மற்றும் மூவி (Movie) போன்ற பிக்சர் மோட்கள் (Picture Modes) வருகின்றன. வீடியோவை போலவே இந்த டிவியில் சவுண்ட் மோட்களும் (Sound Modes) வருகின்றன.
ஸ்டான்டர்ட், ஆப்டிமைஸ்டு (Optimized), ஆம்ப்ளிபை (Amplify) மோட்கள் இருக்கின்றன. 20W ஆடியோ அவுட்புட் (Audio Output) வருகிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த குரோமா 4K டிவியில் டைசன் ஓஎஸ் (Tizen OS) கொண்ட குவாட் கோர் (Quad-core) சிப்செட் வருகிறது.
1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. ஒரு ஆர்எப் இன்புட் (RF Input), இரண்டு யுஎஸ்பி போர்ட் (USB Ports), மூன்று எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports) வருகிறது. மேலும் ஆப்டிகல் ஆடியோ (Optical Audio) மற்றும் ஈதர்நெட் (Ethernet) சப்போர்ட் வருகிறது. அதேபோல டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi) சப்போர்ட் உள்ளது.
ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0) வருகிறது. டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) மற்றும் பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி ஆப்கள் வருகின்றன. ஹாட் கீஸ் கொண்ட ரிமோட் வருகிறது. சாம்சங் டிவி பிளஸ் ஆப் மூலம் 120+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.
இந்த குரோமா டைசன் ஓஎஸ் டிவியில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் வருகிறது. ஆகவே, பிக்ஸ்பை (Bixby) கொண்டிருக்கிறது. 12 மாதங்களுக்கான வாரண்டி கிடைக்கிறது. பிளாக் (Black) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டிவியின் 43 இன்ச் மாடலின் விலை ரூ.25,490ஆக இருக்கிறது. இந்திய மார்கெட்டில் விற்பனை தொடங்கிவிட்டது.
520 குரோமா ஸ்டோர்களில் (Croma Stores) விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல குரோமா.காம் (Croma.com) மற்றும் டாட்டா நியூ (Tata Neu) ஆகிய ஆன்லைன் தளங்களிலும் ஆர்டருக்கு கிடைக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் பக்கா பீச்சர்களுடன் 43 இன்ச் டிவி வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








