Home
Gadgets

16ஜிபி ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள், பிரபலமான 43-இன்ச் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி.. மிஸ் பண்ணாதீங்க..

ஏசர் நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏசர் (Acer) நிறுவனத்தின் பிரபலமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது 43-இன்ச் ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.32,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போத இந்த டிவியை அமேசான் தளத்தில் ரூ.20,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 30W ஸ்பீக்கர்கள், பிரபலமான 43-இன்ச் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி..

43-இன்ச் ஏசர் ஐ-சிரீஸ் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, 16.7 மில்லியன் கலர்ஸ் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே மற்றும் ஃப்ரேம்லெஸ் டிசைனுடன் வெளிவந்துள்ள இந்த 43-இன்ச் ஏசர் ஐ-சிரீஸ் ஸ்மார்ட் டிவி சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்மார்ட் ப்ளூ லைட் ரிடக்‌ஷன் தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக இது கண்களுக்குச் சிறந்த பாதுகாப்பு வழங்கும்.

64-பிட் குவாட் கோர் பிராசஸர் (Quad Core Processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43-இன்ச் ஏசர் ஐ-சிரீஸ் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான 43-இன்ச் ஏசர் ஐ-சிரீஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

43-இன்ச் ஏசர் ஐ-சிரீஸ் ஸ்மார்ட் டிவியில் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஏசர் ஸ்மார்ட் டிவி.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் 43-இன்ச் ஏசர் ஐ-சிரீஸ் ஸ்மார்ட் டிவியில் உள்ளன. பின்பு ஸ்டாண்டர்ட் (Standard), மூவி (Movie), மியூசிக் (Music), வாய்ஸ் (Voice), ஸ்டேடியம் (Stadium) ஆகிய சவுண்ட் மோட்கள் இந்த டிவியில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

 30W ஸ்பீக்கர்கள், பிரபலமான 43-இன்ச் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி..

கணினி, லேப்டாப், செட் டாப் பாக்ஸ், ஸ்பீக்கர்கள் அல்லது கேமிங் கன்சோலை இணைக்க டூயல் பேண்ட் வைஃபை (Dual band Wifi), 2 வே புளூடூத், எச்டிஎம்ஐ 2.0 போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அதவுகளைக் கொண்டுள்ளன 43-இன்ச் ஏசர் ஐ சிரீஸ் ஸ்மார்ட் டிவி. இதுதவிர ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக 43-இன்ச் ஏசர் ஐ-சிரீஸ் ஸ்மார்ட் டிவியின் ரிமோட் ஆனது நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அணுகலுக்கான ஹாட்கிகளைக் கொண்டுள்ளன. அதேபோல் கேமிங் பயன்களுக்கும் இந்த டிவி மிகவும் அருமையாகப் பயன்படும். குறைந்த விலையில் 43-இன்ச் ஏசர் ஐ-சிரீஸ் ஸ்மார்ட் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43-inch Acer Smart TV is available at 36 percent off on Amazon: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X