Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. 8GB ஸ்டோரேஜ்.. 40W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த தாம்சன் 4கே ஸ்மார்ட் டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

எனவே இந்த டிவியை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Thomson 9R PRO 4K Smart Android TV Specifications): 3840 x 2160 பிக்சல்ஸ் மற்றும் அல்ட்ரா எச்டி 4கே மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட தரமான வசதியைக் கொண்டுள்ளது இந்த தாமசன் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.

குறிப்பாக 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடலில் எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஆதரவு, 5000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ (Contrast Ratio) மற்றும் 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி உள்ளது. எனவே இதன் உதவியுடன் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். அதேபோல் 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் குவாட்கோர் மற்றும் ARM Cortex A53 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

குறிப்பாக பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு ஓடிடி தளங்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் 40 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. இதுதவிர வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவி. அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. தற்போது இந்த 4கே ஸ்மார்ட் டிவி மிகவும் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
42 Percent Discount on Thomson 9R PRO 4K Smart Android TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X