கூவி, கூவி விற்கும் அமேசான்.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 24W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் ரெட்மி 4கே டிவி..
ரெட்மி நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிகளுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவிக்கு அமேசானில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசானில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவிக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

எனவே இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலை ரூ.23,499 விலையில் வாங்கிட முடியும். மேலும் இந்த டிவி தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் ( Redmi Smart Fire TV 4K 43 specifications): 3840 x 2160 பிக்சல்ஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் இதில் 4கே டிஸ்பிளே இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெட்மி டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) தொழில்நுட்ப வசதி இருக்கிறது. மேலும் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
அதேபோல் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-Core Cortex A55 processor) உடன் இந்த டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு(Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது ஃபயர் ஓஎஸ் 7 மூலம் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது இந்த டிவி. எனவே நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, சோனிலிவ், யூடியூப் போன்ற தளங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்று இந்த டிவியுடன் வருகிறது. அதேபோல் இந்த ரிமோட்டில் அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் போன்ற தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன.

24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த டிவி. பின்பு டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
இந்த டிவியின் கனெக்டிவிட்டி பொறுத்தவரை வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா ஆகியவை உள்ளன. குறிப்பாக பட்ஜெட் விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறது இந்த ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications








