400W அவுட்புட்.. மொத்த வீட்டையும் அதிரவிடும் சவுண்ட்.. ஆனா விலை கம்மி.. 2 புதிய Govo SoundBar-கள் அறிமுகம்!
உங்கள் ஸ்மார்ட் டிவியில் உள்ள சவுண்ட் சிஸ்டம் ஆனது.. உங்களுடைய வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை திருப்திப்படுத்தும் படியான ஆடியோ அவுட்புட்டை வழங்கவில்லையா? அதிக அளவில் பணம் செலவு செய்யாமல் உங்கள் டிவியின் 'லோ சவுண்ட்' பிரச்சனையை சரிசெய்ய விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கவலையை விடுங்கள்!
உள்நாட்டு ஆடியோ பிராண்டான கோவோ பட்ஜெட் விலையில் 2 புதிய சவுண்ட்பார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அது கோவோ கோ சரவுண்ட் 975 சவுண்ட்பார் (Govo Go Surround 975 Soundbar) மற்றும் கோவோ கோ சரவுண்ட் 940 சவுண்ட்பார் (Govo Go Surround 940 Soundbar) ஆகும். சுவாரசியமாக இவ்விரு சவுண்ட்பார்களுமே டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வருகின்றன.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவ்விரு சவுண்ட்பார்களுமே குர்கானின் மானேசரில் உள்ள சேனல்பிளே ஃபெசிலிட்டியில் தயாரிக்கப்பட்ட, டால்பி அட்மோஸுடன் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' சவுண்ட்பார்கள் First Made-in-India soundbars with Dolby Atmos) ஆகும். அப்படியான கோவோ கோ சரவுண்ட் 975 மற்றும் 940 சவுண்ட்பார்களின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த முழு விவரங்கள் இதோ:
கோவோ கோ சரவுண்ட் 975 மற்றும் 940 சவுண்ட்பார்களின் முக்கிய அம்சங்கள்: இவ்விரு சவுண்ட்பார்களுமே ஹோம் எண்டர்டெயின்மெண்ட் அனுபவத்தை (Home entertainment experience) மேம்படுத்தும் நோக்கத்தின்கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சவுண்ட்பார்களுமே சக்திவாய்ந்த சிப்செட்டை பேக் செய்கின்றன.
மேலும் கோவோ கோ சரவுண்ட் 975 மற்றும் 940 ஆகிய இரண்டு சவுண்ட்பார்களுமே அட்வான்ஸ்டு மேம்பட்ட டிஎஸ்பி சிக்னல் ப்ராசஸிங் (Advanced DSP signal processing) வழியாக டால்பி அட்மோஸ் அனுபவத்தை வழங்குகின்றன மற்றும் சிறந்த ஆடியோ தரத்திற்கான 2.1.2 கான்ஃபிகரேஷனையும் ( 2.1.2 configuration for superior audio quality) கொண்டுள்ளன.
400-வாட் அவுட்புட்டை (400W Output) வழங்கும் இந்த கோவோ சவுண்ட்பார்கள் யூனிவர்சல் எச்டிஎம்ஐ (universal HDMI), ப்ளூடூத் 5.3 ( Bluetooth 5.3), ஆக்ஸ் (, AUX) மற்றும் யூஎஸ்பி (USB) கனெக்டிவிட்டி விருப்பங்கள் மூலம் மல்டிபிள் டிவைஸ்களுடன் தடையற்ற இணைப்பை வழங்குவதால், இதை வீட்டிற்குள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம்.
மேலும், கோவோ நிறுவனத்தின் இந்த புதிய சவுண்ட்பார்கள் ம்யூசிக், மூவீஸ் மற்றும் நியூஸ்-களுக்காக (Music, Movies and News) வடிவமைக்கப்பட்ட மூன்று ஈக்வலைஸர் மோட்களுடன் (equaliser modes) வருகிறது. அதாவது கோவோ கோ சரவுண்ட் 975 மற்றும் 940 ஆகிய இரண்டு சவுண்ட்பார்களுமே வாடிக்கையாளர்களுக்கான பெர்சனலைஸ்டு ப்ரொபைல்களை ஆதரிக்கின்றன.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இவ்விரு சவுண்ட்பார்களும் ரூ.12,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் இதை இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்கலாம். மேலும் இந்த சவுண்ட்பார்கள் விரைவில் பிளிப்கார்ட் (Flipkart) வழியாகவும் வாங்க கிடைக்கும்.
இதுதவிர்த்து இந்த புதிய சவுண்ட்பார்கள் ரிலையன்ஸ் ரீடெய்ல் (Reliance Retail) மற்றும் விஜய் சேல்ஸ் (Vijay Sales) போன்ற முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும் வாங்க கிடைக்கும். இவ்விரு புதிய சவுண்ட்பார்களோடு சேர்த்து டால்பி அட்மோஸ்-ட்யூனிங் கொண்ட மேலும் 3 கோவோ தயாரிப்புகள் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவைகள் கோவோ கோ சரவுண்ட் 980 மற்றும் 965, 525W டால்பி ஆடியோ, வயர்டு ஒலிபெருக்கியுடன் கூடிய 5.1 சரவுண்ட் சவுண்ட் சவுண்ட்பார், கோவோ கோ சரவுண்ட் 880 மற்றும் 870, 240W டால்பி ஆடியோ, 2.1 சரவுண்ட் சவுண்ட் சவுண்ட்பார் மற்றும் கோவோ கோ சரவுண்ட் 860 மற்றும் 800, 180W டால்பி ஆடியோ, 2.1 சரவுண்ட் சவுண்ட் சவுண்ட்பார் ஆகும்.


Click it and Unblock the Notifications








