Home
Gadgets

பெட்ரூம்கே 50 இன்ச் டிவி.. ரூ.23,799 போதும்.. தாம்சன் TQLED டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

டிவி பிரியர்கள் திக்குமுக்காடும் விதமான தள்ளுபடியில் 50 இன்ச் தாம்சன் 4K டிவி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. டால்பி விஷன், டால்பி அட்மோஸ், 40W ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பீச்சர்களில் பின்னி எடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

தாம்சன் 50 இன்ச் டிவி அம்சங்கள் (Thomson 50 inch TV Specification): இதுவொரு கூகுள் டிவி 2023 எடிஷன் (Google TV 2023 Edition) மாடலாகும். இந்த டிவியில் 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) டிகியூஎல்இடி (TQLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதுவொரு ஐபிஎஸ் (IPS) பேனல் மாடலாகும். பெசல்-லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது.

பெட்ரூம்கே 50 இன்ச் டிவி.. ரூ.23,799 போதும்.. தாம்சன் TQLED டிவி!

இந்த டிஸ்பிளேவில் 4K ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது. டிஜிட்டல் நாட்ஸ் ஃபில்டர்கள் (Digital Noise Filter) மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆகவே, டிஸ்பிளே அவுட்புட்டானது, பட்ஜெட்டை விட கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். ஆடியோவிலும் பின்னியெடுக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (dts TruSurround) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 40W பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்கள் (Box Type Speaker) ஸ்பீக்கர்கள் 2 வருகின்றன.

இந்த ஆடியோவில் ஸ்போர்ட்ஸ் மோட் (Sport Mode), மூவி மோட் (Movie Mode) மற்றும் கேமிங் மோட் (Gaming Mode) வருகிறது. ஸ்மூத் பர்ஃபாமெஸ் கொண்ட குவாட் கோர் மீடியாடெக் (Quad-core MediaTek) சிப்செட் மற்றும் மாலி 450 ஜிபியு (Mali450 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் டியோ (Google Deo) மற்றும் கூகுள் பிளே (Google Play) சப்போர்ட் கொண்டிருக்கிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். அதேபோல பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) சப்போர்ட் வருகிறது.

மேலும், ஏர்பிளே (AirPlay) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டிவியில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. இந்த தாம்சன் டிவியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், யுஎஸ்பி (USB), எச்டிஎம்ஐ (HDMI), ப்ளூடூத் (Bluetooth), ஈதர்நெட் (Ethernet) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இன்டர்நெட் அக்சஸ் ரிமோட் (Internet Access Remote) கொண்டுள்ளது.

ஆட்டோ ஆன்/ஆஃப், ஸ்லீப் டைமர் போன்ற பீச்சர்களும் வருகின்றன. இந்த தாம்சன் டிவிக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த 50 இன்ச் தாம்சன் டிவியின் பட்ஜெட்டை பார்க்கையில், ரூ.24,999ஆக இருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1,200 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த தள்ளுபடியை பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு (Flipkart Axis Bank Credit Card) பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த டிவியை வெறும் ரூ.23,799 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு கிடைக்கும் 50 இன்ச் 4K டிவிகளில் அதிக பீச்சர்களை இந்த தாம்சன் டிவி கொண்டிருப்பதால், பட்ஜெட்டுக்கு ஏற்பதாகவே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
40 Percent Discount on Thomson 50 inch 4K LED TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X