Home
Gadgets

அடிச்சான் பாரு பிளிப்கார்ட்.. ரூ.16499 பட்ஜெட்ல 4கே QLED டிவி.. டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Infinix 43 inch QLED Ultra HD 4K Smart Google TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த இன்பினிக்ஸ் டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (43GU1Q) மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.16499 விலையில் வாங்கிவிட முடியும்.

அடிச்சான் பாரு பிளிப்கார்ட்.. ரூ.16499 பட்ஜெட்ல 4கே QLED டிவி..

இன்பினிக்ஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Infinix 43 inch QLED 4K Smart Google TV Specifications): தரமான குவாட் கோர் பிராசஸர் (QUAD Core Processor) உடன் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52எம்சி1 (Mali-G52MC1) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

அல்ட்ரா எச்டி 4கே கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது இன்பினிக்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 (HDR 10), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178 degree viewing angle) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் இந்த ஸ்மார்ட் டிவி.

அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த இன்பினிக்ஸ் டிவி இயங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்றவற்றை இதில் பயன்படுத்த முடியும். பின்பு நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் போன்ற இன்-பில்ட் ஆப்கள் கொண்டுள்ளது இந்த டிவி.

குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

அடிச்சான் பாரு பிளிப்கார்ட்.. ரூ.16499 பட்ஜெட்ல 4கே QLED டிவி..

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 40W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்தது இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி. இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

3 யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. பின்பு பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன. இதுதவிர பல்வேறு அசத்தலான அம்சங்கள் இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

photo credit: flipkart, infinix

More from GizBot

Best Mobiles in India

English summary
40 percent discount on Infinix 43 inch QLED 4K Smart TV with 2GB Ram in Flipkart sale: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X