அள்ளி கொடுக்கும் பிளிப்கார்ட்.. 30W ஸ்பீக்கர்கள்.. 16ஜிபி மெமரி.. ஆஃபரில் 40 இன்ச் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் (Acer Advanced I Series) ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 16ஜிபி ஸ்டோரேஜ், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 40-இன்ச் கொண்ட ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.17249 இருந்தால் போதும் இந்த டிவியை வாங்கிவிட முடியும்.

ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Acer Advanced I Series Smart TV specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி, எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
64-பிட் குவாட் கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்டுள்ள பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
குறிப்பாக கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இந்த டிவியில் 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் (30 w speaker) உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோகாஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. பின்பு ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
40-இன்ச் கொண்ட இந்த ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆனது அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஏசர் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








