வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ரூ.15,999 பட்ஜெட்ல 40 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. ஸ்மார்ட் எல்இடி டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் 40 இன்ச் தோஷிபா வி சீரிஸ் எல்இடி டிவி (40 inch TOSHIBA V Series LED TV) மாடலுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.15,999 பட்ஜெட்டில் டால்பி ஆடியோ, 1080p ரெசொலூஷன், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த தோஷிபா டிவிக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
32 இன்ச் டிவி வாங்கும் விலைக்கே இப்போது 40 இன்ச் மற்றும் 43 இன்ச் எல்இடி டிவிகள் கிடைக்கின்றன. இதனால், எந்த மாடலை வாங்குவது என்ற குழப்பம் கஸ்டமர்களிடையே இருக்கிறது. இப்போது, பார்க்கப்போகும் டிவி மாடலானது, பேசிக் பீச்சர்களுடன் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, உங்களுக்கு பெரிய டிஸ்பிளே மலிவான விலைக்கு வேண்டுமானால் இதை வாங்கலாம்.

அமேசான் தளத்தில் 46 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.16,999 பட்ஜெட்டில் இப்போது இந்த டிவி ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதுபோக ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த 40 இன்ச் தோஷிபா வி சீரிஸ் எல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இந்த 40 இன்ச் தோஷிபா வி சீரிஸ் எல்இடி டிவி அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப டிஸ்பிளே, ஆடியோ மற்றும் பர்ஃபாமென்ஸ் பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல ஆண்ட்ராய்டு டிவி அல்லது கூகுள் டிவி ஓஎஸ் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், ஓடிடி மற்றும் இதர பீச்சர்களை இந்த டிவிலும் பெற்று கொள்ளலாம்.
40 இன்ச் தோஷிபா டிவி அம்சங்கள் (40 inch TOSHIBA TV Specifications): இந்த தோஷிபா டிவியானது வீ சீரிஸ் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது. 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த எச்டி ரெடி டிஸ்பிளேவில் 1080p ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம். மேலும், வழக்கமான 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் ஃபிரேம்லெஸ் டிசைன் கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டிலும் ஆடியோவில் குறை வைக்கப்படவில்லை. ஏனென்றால், டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 20W ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்களுக்கு ஸ்டீரியோ அவுட்புட் கிடைக்கிறது. இதுபோக டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual: X) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ரெக்சா பவர் ஆடியோ (REGZA Power Audio) சப்போர்ட் கிடைக்கிறது.
ஆகவே, பட்ஜெட்டைவிட கூடுதலாக அவுட்புட் கிடைக்கும் ஆடியோ சிஸ்டம் எதிர்பார்க்க முடிகிறது. இந்த 40 இன்ச் தோஷிபா வி சீரிஸ் எல்இடி டிவியில் விடா யூ9 ஓஎஸ் (VIDAA U9 OS) கிடைக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் டிவி ஓஎஸ்களில் கிடைப்பதை போலவே பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) போன்ற ஓடிடிகள் கிடைக்கின்றன.
மேலும், யூடியூப் (YouTube), ஏர்பிளே (Airplay) சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்மார்ட் கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், ஸ்கிரீன் ஷேரிங் (Screen Sharing), ரெக்சா என்ஜின் (REGZA Engine) போன்றவை கிடைக்கின்றன. டிஸ்பிளவுக்கு ரெக்சா பிக்சர் என்ஜின் (REGZA Picture Engine), கேம் மோட் (Game Mode), கலர் ரீ-மாஸ்டர் (Color Re-master), பிக்சர் ஆப்டிமைசர் (Picture Optimizer) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








