Home
Gadgets

பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 1.. வெறும் ரூ.13,990-க்கு 40 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. 16 ஜிபி ரேம்.. எந்த மாடல்?

ஹாலுக்கு மட்டுமல்ல, பெட்ரூமுக்கும் சேர்த்து 2 டிவியாக ஆர்டர் செய்யலாம் போல என்று சொல்லும்படியான பட்ஜெட்டில் 40 இன்ச் டிசிஎல் எல்இடி டிவி (40 inch TCL LED TV) கிடைக்கிறது. நேரடி விலை குறைப்பு சலுகையை கொடுக்கும்படி கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் என்று 2 சலுகைகளுடன் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த 40 இன்ச் டிவியின் பீச்சர்கள் எப்படி? கூப்பன் டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

32 இன்ச் டிவிகளுக்கு இப்போதெல்லாம் மவுசு குறைந்துவிட்டது. ஏனென்றால், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகளே ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைக்கின்றன. அதிலும் 40 இன்ச் டிவிகள் அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், ஒரே ஆர்டரில் 2 டிவி வாங்கும் கஸ்டமர்களையும் பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் 40 இன்ச் டிசிஎல் எல்இடி டிவி இணைந்துவிட்டது.

பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 1.. வெறும் ரூ.13,990-க்கு 40 இன்ச் டிவி!

40 இன்ச் டிசிஎல் எல்இடி டிவி அம்சங்கள் (40 inch TCL LED TV Specifications): இந்த டிசிஎல் டிவியில் 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், மல்டி-வியூவிங் மோட் (Multi-viewing Mode) சப்போர்ட் உள்ளது.

இதுபோக டி-ஸ்கிரீன் (T-Screen) மற்றும் ஏஐ கிளாரிட்டி (AI Clarity) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, கலர் அக்கியூரசி மற்றும் ரெசொலூஷன் பக்காவாக எதிர்பார்க்கலாம். மெட்டாலிக் பெசல்-லெஸ் (Metallic Bezel-less) டிசைனில் கிடைப்பதால், வியூவிங் அனுபவம் பிரீமியமாக கிடைக்கிறது. மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) மற்றும் ஏஐபிகியூ என்சின் (AiPQ Engine) கிடைக்கிறது.

இந்த 40 இன்ச் டிசிஎல் எல்இடி டிவியில் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) உள்ளது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் மற்றும் யூடியூப், நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. மேலும், குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in) சப்போர்ட் உள்ளது.

அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த டிவியின் ஆடியோவை பார்க்கையில் 19W அவுட்புட் கிடைக்கிறது. இதில் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கிடைக்கிறது. இதில் ஸ்கிரீன் ஷேரிங் (Screen Sharing), இன்-பில்ட் வை-பை (In-Built Wi-Fi) மற்றும் ப்ளடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன.

மேலும், யுஎஸ்பி போர்ட், எல்ஏஎன் போர்ட், கேபிள் இன், டிஜிட்டல் ஆடியோ அவுட், எச்டிஎம்ஐ போர்ட், ஏவி இன் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த டிவிக்கு 2 வருடங்கள் வாரண்டி கிடைக்கிறது. ஸ்மார்ட் ரிமோட் கிடையாது. இருப்பினும், ஹாட்-கீ சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது விலை பார்ப்போம்.

40 இன்ச் டிசிஎல் எல்இடி டிவி விலை (40 inch TCL LED TV Price): பட்ஜெட்டில் இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும், இந்த டிவியின் விலை ரூ.15,990ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,990 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
40 inch TCL LED TV Sale Under Rs 14000 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X