40-இன்ச் OnePlus ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.! முந்துங்கள்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே இந்நிறுவனம் போன்களை அறிமுகம் செய்யும் போது கூடவே ஸ்மார்ட் டிவிகளையும் அறிமுகம் செய்கிறது. குறிப்பாக சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளை விட ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகின்றன.
அட்டகாச சலுகை
இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் பிரபலமான 40-இன்ச் OnePlus Y1 ஸ்மார்ட் டிவி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த டிவிக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.18,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இப்போது இந்த ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். 40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 240 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.
ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி பிராசஸர்?
இந்த ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி மாடலில் Cortex-A53 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

இந்த ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவும் உள்ளது. பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபிஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.
தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக சியோமி நிறுவனத்தை விட ஒன்பிளஸ் நிறுவனம் ஆடியோ வசதியில் அதி கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். பட்ஜெட் விலையில் ஒரு அருமையான 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால் இந்த ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி மாடலை வாங்குவது நல்லது.

பிப்ரவரி 7?
அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் பிப்ரவரி 7-ம் தேதி ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 65-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 65-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








