Home
Gadgets

40-இன்ச் Nokia ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.! அசத்தல் சலுகை அறிவிப்பு.!

நோக்கியா நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான அம்சங்களுடன் இந்நிறுவனம் சாதனங்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் நோக்கியா நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் மிகவும் பிரபலமான நோக்கியா 4-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நோக்கியா 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (40FHDADNVVEE) மாடலுக்கு தான் பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

40-இன்ச் Nokia டிவியை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!

அதாவது நோக்கியா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.29,000-விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.18,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இப்போது இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த 40-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் 1920 x 1080பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் மீடியாடெக் Picture Engine ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம்.

40-இன்ச் Nokia டிவியை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!

40-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதில் Mali G31 கிராஃபிக் பிராசஸர் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த நோக்கயா ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது 40-இன்ச் நோக்கியா ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தனித்துவமான மென்பொருள் வசதியுடன் இந்த அசத்தலான நோக்கியா ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

அதேபோல் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது 40-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

40-இன்ச் Nokia டிவியை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் நோக்கியா ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக சியோமி, ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளை போல் இந்த நோக்கியா 40-இன்ச் ஸ்மார்ட் டிவியும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல்
உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
40-inch Nokia Smart TV is offered at a discount of 34 percent on Flipkart : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X