Home
Gadgets

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.13,999 பட்ஜெட்ல 40-இன்ச் ஸ்மார்ட் டிவி.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் கம்மி விலையில் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் டிவிகள் வெளிவருகின்றன.

இந்நிலையில் பிரபலமான 40-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் (Horizon Edition) ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 4ஏ மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டிவி முன்பு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த டிவியை ரூ.13,999 விலையில் வாங்க முடியும்.

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.13,999 பட்ஜெட்ல 40-இன்ச் ஸ்மார்ட் டிவி..

இந்த 40-இன்ச் ஹாரிசன் எடிஷன் மாடல் ஆனது பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 93.7% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் வருகிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். பின்பு ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல அசத்தலான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி.

குவாட்-கோர் பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். எனவே குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

ஆடியோவைப் பொறுத்தவரை இந்த 40-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் ஆனது DTS-HD உடன் 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 3.5மிமீ ஆடியோ அவுட், வைஃபை, யுஎஸ்பி போர்ட் மற்றும் மூன்று எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த இணைப்பு ஆதரவுகள் சவுண்ட்பார், ஹோம் தியேட்டர் போன்ற பல சாதனங்களுடன் எளிதாக இணைக்க உதவுகிறது. மேலும் இந்த 40-இன்ச் ஹாரிசன் எடிஷன் மாடலில் Vivid Picture Engine (VPE) technology இருப்பதால் சிறந்த திரை அனுபவத்தைப் பெறமுடியும். அதேசமயம் துல்லியமான காட்சிகள் மற்றும் சிறந்த வண்ணங்களை வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் 40-இன்ச் ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.13,999 பட்ஜெட்ல 40-இன்ச் ஸ்மார்ட் டிவி..

அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 40-இன்ச் ஹாரிசன் எடிஷன் மாடல். குறிப்பாக மேம்பட்ட அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த ஸ்மார்ட் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் சியோமி நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக தற்போது இந்திய சந்தையில் ஒன்பிளஸ், சாம்சங், எல்ஜி, ரியல்மி போன்ற நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பட்ஜெட் விலையில் டிவிகளை அறிமுகம் செய் வருகிறது சியோமி. குறிப்பாக தனித்துவமான மென்பொருள் வசதியுடன் சியோமி ஸ்மார்ட் டிவிகள் வெளிவருவதால் நல்ல அதிக வரவேற்பு உள்ளது.

photo courtesy: flipkart, xiaomi

More from GizBot

Best Mobiles in India

English summary
40-inch Mi 4A Horizon Edition Smart TV is 53 percent off on Flipkart: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X