வாரி வழங்கிய ஆஃபர்.. ரூ.16,999 பட்ஜெட்ல 40 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. டிஸ்கவுண்ட்டில் வரும் Acer டிவி மாடல்!
பிளிப்கார்ட் விற்பனையில் டிஸ்கவுண்ட் விலையில் டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு லட்டு போன்ற ஆஃபருடன் 40 இன்ச் டிஸ்பிளே மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ, ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ், 16 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற பீச்சர்களுடன்40 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் டிவி (40 inch Acer I PRO Series TV) கிடைக்கிறது. ஃபிரேம்லெஸ் டிசைனில் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் இந்த ஏசர் டிவியின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
40 இன்ச் ஏசர் டிவி அம்சங்கள் (40 inch Acer TV Specifications): இந்த டிவியானது ஐ ப்ரோ சீரிஸ் கீழ் கிடைக்கிறது. 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 40 இன்ச் (920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுபோக 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைப்பதால், கலர் அக்கியூரசி பக்காவாக எதிர்பார்க்கலாம். ஃபுல்எச்டி (Full HD) ரெசொலூஷன் வருகிறது.

மேலும், எச்டிஆர்10 (HDR10), சூப்பர் கான்ட்ராஸ்ட் மற்றும் இன்டலிஜென்ட் ஃபிரேம் ஸ்டெபிலைசேஷன் என்ஜின் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே பீச்சர்களுடன் ஃபிரேம்லெஸ் டிசைனில் வருவதால், பிரீமியம் லுக் மற்றும் அனுபவம் கொடுக்கிறது. இந்த ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் டிவியின் ஆடியோவிலும் குறை சொல்ல முடியாது. 30W ஆடியோ அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் பேக் செய்துள்ளது.
இதுபோக பட்ஜெட்டில் எதிர்பார்க்காதபடி டால்பி ஆடியோ (Dolby Audio) கொடுக்கிறது. மிட்-ரேஞ்ச் டிவிகளில் கிடைக்கும் ஆடியோ அனுபவம் பெறலாம். கூகுள் டிவி ஓஎஸ் 5.0 (Google TV 5.0) கிடைக்கிறது. கூகுள் காஸ்ட் (Google Cast), கூகுள் மீட் (Google Meet) போன்ற ஆப்களையும் கொடுக்கிறது. இந்த ஏசர் டிவிக்கு 1.5 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரோஜ் கிடைக்கிறது.
பிரத்யேகமாக கோர்டெக்ஸ் ஏ55 சிப்செட் மற்றும் மாலி ஜி31 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்காவாகவே இருக்கும். கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் மற்றும் அதில் நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடிகளுக்கு ஹாட்-கீஸ் கிடைக்கிறது.

ஸ்மார்ட் கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், ப்ளூடூத் (Bluetooth), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) மற்றும் 1 யுஎஸ்பி போர்ட் (USB Port) உள்ளது. மேலும், நெட்வொர்க், ஹெட்போன் மற்றும் ஏவி போர்ட்களும் கிடைக்கின்றன. இப்போது, விலை விவரங்களுக்கு செல்லலாம்.
இந்த 40 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் டிவியானது, 56 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.16,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. பிளிகார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டருக்கு கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் கிரெடிட் கார்டு ஆஃபர்கள் மற்றும் ஈஎம்ஐ ஆஃபர்களும் இந்த டிவிக்கு கிடைக்கின்றன. இதை பிளிப்கார்ட் தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த டிவியின் மாடல் பெயர் AR40FDIGU2841AT ஆகும். பிளாக் கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டியுடன் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டிவியை ஆர்டர் செய்தால், டிவி, ஸ்மார்ட் ரிமோட் மற்றும் டேபிள் ஸ்டாண்ட் ஆகியவை கொடுக்கப்படும். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப குறையில்லாத பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications








