ஆர்டர் அள்ளுமே.. ரூ.16,999 போதும்.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள் உடன் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
பண்டிகை காலம் என்பதால் பிளிப்கார்ட், அமேசான் போட்டிப் போட்டுக் கொண்டு டிவி, மொபைல், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் அமேசான் தளத்தில் பிரபல நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது அமேசான் தளத்தில் ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி (Acer Advanced I Series Full HD Smart Tv) மாடலுக்கு தான் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவி முன்பு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது இந்த ஏசர் டிவிக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.16,999 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி, எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
64-பிட் குவாட் கோர்ட் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்டுள்ள பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த டிவியில் 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
குறிப்பாக டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோகாஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. பின்பு ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
ஒன்பிளஸ், சியோமி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை ரூ.20,000 அல்லது அதற்கும் மேல் தான் விற்பனை செய்கின்றன. ஆனால் ஏசர் நிறுவனம் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை சற்று குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. எனவே இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
மேலும் ஏசர் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








