ஆளுக்கு 2 ஆர்டர் போடும் விலை.. ஒரே கல்லுல 4 மாங்காய்.. வயர்லெஸ் சார்ஜர் + பவர் பேங்க் + போன் ஸ்டாண்ட்!
ஆம்பிரேன் (Ambrane) நிறுவனம் இந்திய சந்தையில், சற்றே வித்தியாசமான ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. இது வயர்லெஸ் சார்ஜராக, போன் ஸ்டாண்ட்டாக, பவர் பேங்க் ஆக மற்றும் வயர்லெஸ் பவர் பேங்க் ஆக வேலை செய்யும் ஒரு 3-இன்-1 தயாரிப்பு ஆகும்.
ஏரோசின்க் குவாட் வயர்லெஸ் சார்ஜர் கம் பவர்பேங்க் (AeroSync Quad Wireless Charger Cum Powerbank) என்று அழைக்கப்படும் இந்த தயாரிப்பு, அம்ப்ரேன் நிறுவனத்தின் மேட் இன் இந்தியா (Made in India) முன்முயற்சியின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை நிர்ணயம் என்ன? இதை வைத்து என்னென்ன செய்ய முடியும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

என்ன விலை? எங்கே வாங்கலாம்? இந்தியாவில் ஆம்பிரேன் ஏரோசின்க் குவாட் வயர்லெஸ் சார்ஜர் கம் பவர்பேங்க் ஆனது ரூ.1999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதை அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஆம்பிரேன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வாங்கலாம்.
என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? ஏரோசின்க் குவாட் ஆனது மொத்தம் நான்கு செயல்பாடுகளை (Four Functionalities) வழங்குகிறது. முதல் செயல்பாடு - இயர்பட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங்கை 5W வேகத்தின் (5W wireless charge for earbuds and smartphones) கீழ் வழங்கும்.

இரண்டாவது செயல்பாடு - 15W வேகத்தின் கீழ் போர்ட்டபிள் வயர்லெஸ் பவர் பேங்க் (Portable wireless power bank) ஆக செயல்படும். மூன்றாவது செயல்பாடு - அதிகபட்சம் 22.5W வேகத்தின் கீழ் வயர்டு சார்ஜிங் பவர் பேங்க் (Wireless Charging Power Bank) ஆக செயல்படும். நான்காவது மற்றும் கடைசி செயல்பாடு - மொபைல் சார்ஜிங் ஸ்டாண்டாக (Mobile charging stand) செயல்படும்
கிடைமட்ட மற்றும் செங்குத்தான சார்ஜிங் (Horizontal and vertical charging) ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் ஏரோசின்க் குவாட் ஆனது 10,000எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரியை (10000 mAh lithium-polymer battery) கொண்டுள்ளது. அதாவது இது 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போனை மிகவும் எளிதாக 2 முறை சார்ஜ் செய்யும்.

க்யூஐ-எனேபிள்டு டிவைஸ்களுக்கு (Qi-enabled devices) ஏற்றவாறு, இது டைப்-சி மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் அவுட்புட்கள் மூலம் 22.5W சார்ஜிங்கை வழங்கும் திறனை கொண்டுள்ளது. கூடவே இது குவிக் சார்ஜ் 3.0 (Quick Charge 3.0) மற்றும் பவர் டெலிவரியையும் (Power Delivery) ஆதரிக்கிறது. மேலும் இது 15W வயர்லெஸ் அவுட்புட்டையும் மற்றும் 5W பேஸிக் வயர்லெஸ் அவுட்புட்டையும் கொண்டுள்ளது, இது திறமையான சார்ஜிங்கை உறுதி செய்கிறது.
எல்லாவற்றை விடவும் முக்கியமாக இந்த பவர் பேங்க், டைப்-சி போர்ட் வழியாக 20W பாஸ்ட் இன்புட் மூலம் செல்ஃப் சார்ஜிங்கையும் (Rapid self-charging) ஆதரிக்கிறது. ஏரோசின்க் குவாட் ஆனது 180-நாள் உத்தரவாதத்துடன் வருகிறது, மேலும் இது பிஐஎஸ்-ஆல் (BIS - Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்டுள்ளது.
செக்யூரிட்டியை பொறுத்தவரை, இது மல்டி லேயர் சார்ஜிங் ப்ரொடெக்ஷனை (Multi-layer charging protection) கொண்டுள்ளதாக ஆம்பிரேன் நிறுவனம் கூறுகிறது. அதாவது ஏரோசின்க் குவாட் ஆனது பவர் பேங்க் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட டிவைஸ்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது யூஎஸ்பி-ஏ அல்லது டைப்-சி ஆகிய இரண்டு டிவைஸ்களுடனும் இணக்கமாக செயல்படும். கடைசியாக இது பயனர்களுக்கு நிகழ்நேர நுண்ணறிவுகளை (Real-time insights) வழங்கும் ஸ்மார்ட் எல்இடி இன்டிகேட்டர்களையும் (Smart LED Indicators) கொண்டுள்ளது.
ஆம்பிரேன் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஆன அசோக் ராஜ்பால் (Ashok Rajpal), "ஏரோசின்க் குவாட் ஆனது கேபிள் குழப்பத்தை நீக்கி, நேர்த்தியான, ஒழுங்கமைக்கப்பட்ட ஸோனை உருவாக்கும்.உங்கள் மேசையிலோ அல்லது வெளிப்புறத்திலோ, இந்த 4-இன் -1 சார்ஜிங் டிவைஸ் ஆனது வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பவர் பேங்க் வசதி ஆகிய இரண்டையும் வழங்கும்; ங்கள் சார்ஜிங் வழக்கத்தை எளிதாக்கும்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








