Home
Gadgets

சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!

ஸ்மார்ட்போன் என்பது பிரதான பயன்பாடாகி வரும் அதே நேரத்தில் ஸ்மார்ட்போனுடன் இணைக்கக் கூடிய கேட்ஜெட்களும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதில் ப்ளூடூத் நெக்பேண்ட் மற்றும் ஸ்மார்ட்வாட்சுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்களிடம் சிறந்த ப்ளூடூத் நெக்பேண்ட் இல்லை என்றால் அதை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்.

ஆடியோ கேட்ஜெட்களுக்கு புகழ் பெற்ற boAt

போட் நிறுவனம் புது நெக்பேண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது boAt Rockerz 378 ஆகும். இந்த புதிய நெக்பேண்ட் ஆனது மலிவு விலையில் வெளியாகி இருக்கிறது. பல்வேறு கேட்ஜெட்கள் போட் அறிமுகம் செய்து வந்தாலும் ஆடியோ தயாரிப்புகளில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் இது. அதன்படி இந்த நெக்பேண்ட்டிலும் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

காதுல மாட்டுனா? 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!

பட்ஜெட் விலையில் சிறந்த நெக்பேண்ட்

boAt Rockerz 378 ஆனது ரூ.1300 என்ற விலைப் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. பட்ஜெட் விலையில் சிறந்த நெக்பேண்ட் வாங்கத் திட்டமிட்டிவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இதில் 25 மணிநேர பேட்டரி ஆயுள், 3டி ஸ்பேஷியல் பயோனிக் சுவண்ட் என பல மேம்பட்ட அம்சங்கள் இருக்கிறது.

முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ ஆனது ரூ.1499 விலையில் அறிமுகமான நிலையில் தற்போது நெக்பேண்ட் அதற்கும் குறைவான விலையில் அறிமுகமாகி இருக்கிறது.

புதிய boAt நெக்பேண்ட் விலை

boAt Rockerz 378 நெக்பேண்ட் இன் சரியான விலை ரூ.1299 ஆகும்,. இந்த நெக்பேண்ட் ஆனது பிளாக், டார்க் ப்ளூ, லைட் ப்ளூ மற்றும் ரெட் ஆகிய வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த நெக்பேண்ட் ஆனது போட் லைஃப் ஸ்டைல்.காம், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

காதுல மாட்டுனா? 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!

சிறந்த பேட்டரி ஆயுள் கொண்ட ப்ளூடூத் ஹெட்செட்

இந்த boAt Rockerz 378 இன் சிறப்பம்சங்களை அறிவதற்கு ஆவலமாக இருக்கிறதா?. இந்த நெக்பேண்ட் இன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் பேட்டரி ஆயுள் ஆகும். இந்த நெக்பேண்ட் ஆனது 25 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. அதேபோல் 10 நிமிட சார்ஜிங் மூலம் 15 மணி நேர ப்ளேபேக் ஆதரவை பெறலாம். அதேபோல் இதில் வழங்கப்பட்டுள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 30 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

சிறந்த ஆடியோ ஆதரவு வழங்கும் நெக்பேண்ட்

அதேபோல் இந்த நெக்பேண்ட் இல் 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் உடன் கூடிய டைனமிக் டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிறந்த ஒலி தரத்திற்கு என THX மூலம் இது ட்யூன் செய்யப்படுகிறது. இதன்மூலம் 3 பரிமாணங்களில் யதார்த்தமான ஆடியோ வெளியீட்டை துல்லியமாக பெற முடியும் என போட் குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் பிரத்யேகமான signature sound ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த நெக்பேண்ட் இல் துல்லியமாக பேஸ் சத்தத்தை பெறலாம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு ஆதரவு

இந்த நெக்பேண்ட் இல் ப்ளூடூத் V5.1 ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வேகமான இணைப்பை பெறலாம். அதாவது ஸ்மார்ட்போனில் ஒருமுறை இந்த நெக்பேண்ட்டை இணைத்துவிட்டு பிறகு எப்போது ப்ளூடூத்தை ஆன் செய்தாலும் தானாக உடனுக்குடன் இணைக்கப்படும். வாட்டர் மற்றும் வியர்வை எதிர்ப்புக்கான IPX5 மதிப்பீட்டையும் பெற்றிருக்கிறது இந்த நெக்பேண்ட்.

காதுல மாட்டுனா? 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!

ஹேங் ஆவதற்கு வாய்ப்பே இல்லை

இதில் பிரத்யேக ஃபாஸ்ட் ஸ்விட்ச் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒவ்வொரு செயலை உடனுக்குடன் மேற்கொள்ளலாம். கூகுள் மற்றும் சிரி போன்ற வாய்ஸ் கன்ட்ரோல் அம்சமும் இதில் இருக்கிறது.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த நெக்பேண்ட் இதுதான்..

இதில் வழங்கப்பட்டுள்ள வாய்ஸ் கன்ட்ரோல் அம்சத்தின் மூலம் சமீபத்திய செய்திகள், வானிலை அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை கேட்க முடியும். மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள ஒரு பட்டனை அழுத்தினால் போதும் அப்போதைய கிரிக்கெட் ஸ்கோர் என்பது துல்லியமாக தெரிவிக்கப்படும். ரூ.1,299 விலையில் இத்தனை அம்சங்களுடன் ப்ளூடூத் நெக்பேண்ட் என்பது மிக அரிது. எனவே நீங்கள் புதிய நெக்பேண்ட் வாங்கத் திட்டமிட்டால் யோசிக்காமல் இதை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
3D Spatial Sound, 25 Hour Battery Life: boAt Rockerz 378 Bluetooth Neckband Launched in India at Budget Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X