Home
Gadgets

அசூர விற்பனை.. வெறும் ரூ.26749 போதும்.. 120 இன்ச் ஸ்கிரீன்.. LED டெக்னாலஜி.. 4K சப்போர்ட்.. எந்த மாடல்?

அமேசான் தள்ளுபடியில் ஒரு 40 இன்ச் எல்இடி டிவி வாங்கும் விலைக்கு 120 இன்ச் புரொஜெக்சன், 4கே சப்போர்ட் மற்றும் இன்பில்ட் ஸ்பீக்கர்கள் கொண்ட போர்ட்ரானிக்ஸ் பிகோ 12 புரொஜெக்டர் (Portronics Pico 12) விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

போர்ட்ரானிக்ஸ் பிகோ 12 அம்சங்கள் (Portronics Pico 12 Specifications): இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் இன்டோர் மற்றும் அவுட்டோர் பயன்பாட்டுக்கு ஏற்ப மிகவும் காம்பெக்ட் டிசைன் (Compact Design) கொண்டிருக்கிறது. ஆகவே, வீட்டிற்குள் மட்டுமல்லாமல், வெளியேயும் இதை எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம். இதுவொரு டிஎல்பி எல்இடி டெக்னாலஜி (DLP LED Technology) சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் என்பதால், பக்கா குவாலிட்டியான ஸ்டீரிமிங் அனுபவம் கிடைக்கிறது.

ரூ.26749 போதும்.. 120 இன்ச்  ஸ்கிரீன்.. LED டெக்னாலஜி.. 4K சப்போர்ட்!

அதேபோல 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD), 3200 லுமென்ஸ் (3200 Lumens) மற்றும் 30,000 ஹவர்ஸ் லேம்ப் லைப் (Lamp Life) கொண்டிருக்கிறது. ஆகவே, லாங் லாஸ்டிங் விஷுவல் (Long Lasting Visuals) சப்போர்ட் தாராளமாக எதிர்பார்க்கலாம். இந்த புரொஜெக்டரில் 20 இன்ச் முதல் 120 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. ஆகவே, மினி தியோட்டர் அனுபவத்தை பெற்று கொள்ள முடியும்.

இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 12 புரொஜெக்டரில் ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) மற்றும் போகஸ் வீல் (Focus Wheel) சப்போர்ட் வருகிறது. இதன் மூலம் மிகவும் சார்ப் இமேஜ் (Sharp Image) புரொஜெக்சன் செய்து கொள்ள முடியும். இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டரின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் (HDMI) போர்ட், ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை (Wi-Fi) வருகிறது.

அதேபோல டிசி (DC) மற்றும் ஐஆர் (IR) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், டச் கன்ட்ரோல் (Touch Control) பீச்சர் வருகிறது. இந்த மாடலில் 5W பில்ட் இன் ஸ்பீக்கர்கள் (Built-in Speakers) கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth Speaker) கனெக்டிவிட்டி சப்போர்ட் உள்ளது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் சவுண்ட் அனுபவத்தை இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 12 மாடல் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரூ.26749 போதும்.. 120 இன்ச்  ஸ்கிரீன்.. LED டெக்னாலஜி.. 4K சப்போர்ட்!

இந்த புரொஜெக்டரில் பென்டிரைவ் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மூலம் புரொஜெக்சன் செய்து கொள்ள முடியும். இதற்காக ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 12 புரொஜெக்டரில் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) மற்றும் ஆப்டாய்ட் ஓஎஸ் (Aptoide OS) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவொரு போர்டபிள் புரொஜெக்டர் என்பதால், இன்-பில்ட் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் அதிகாமான பேட்டரி பேக்கப் கொடுக்கக்கூடியது. இந்த பேட்டரியோடு சேர்த்து 715 கிராம் எடை கொண்டுள்ளது. அதோடு 11 இன்ச் உயரம் மற்றும் 6.5 இன்ச் அகலம் கொண்டிருக்கிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 12 புரொஜெக்டருக்கு 12 மாதங்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.

ரூ.26749 போதும்.. 120 இன்ச்  ஸ்கிரீன்.. LED டெக்னாலஜி.. 4K சப்போர்ட்!

இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த புரொஜெக்டரின் விலை ரூ.29,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், அறிமுக சலுகையாக அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போர்ட்ரானிக்ஸ்.காம் (Portronics.com) ஆகிய தளங்களில் வெறும் ரூ.27,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும், அமேசானில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 12 புரொஜெக்டரை வெறும் ரூ.26,749க்கு வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
38 Percent Discount on Portronics Pico 12 Smart Projector in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X