Home
Gadgets

ஒன்னு இல்ல.. 2 டிவி வாங்கலாம்.. ரூ.13,749-தான்.. 43 இன்ச் எல்இடி டிவி.. டால்பி ஆடியோ.. குவாட் சிப்செட்!

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) இன்பினிக்ஸ் நிறுவனத்தின் 43 இன்ச் ஃபுல்எச்டி எல்இடி டிவிக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. இப்போது, அந்த டிவியின் விலையை பார்த்தால், வீட்டுக்கு 2 டிவி வாங்கும் அளவுக்கு கம்மியாக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ரூ.40,000 முதல் ரூ.50,000 விலையில் கிடைக்கும் டிவிகளில் இருக்கும் அம்சங்கள் வெறும் ரூ.15,000 பட்ஜெட்டில் வரும் டிவிகளில் வந்துவிட்டன. இதனால், 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் எந்த டிவியை வாங்குவது என்ற குழப்பம் வரும் அளவுக்கு பல்வேறு நிறுவனங்களின் டிவிகள் கம்மியான பட்ஜெட்டில் கிடைக்கின்றன.

ஒன்னு இல்ல.. 2 டிவி வாங்கலாம்.. ரூ.13,749-தான்.. 43 இன்ச் எல்இடி டிவி!

இதில் இன்பினிக்ஸ் நிறுவனம் சற்று நல்ல அம்சங்களை கொடுக்கிறது. அதே 15,000 பட்ஜெட்டில் மிரளவிடும் அம்சங்களுடன் ஒய்1 சீரிஸ் டிவிகளை களமிறக்கியது. இந்த சீரிஸ் டிவிகளில் 43 இன்ச் டிவி விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. முதலில் இந்த டிவியின் அம்சங்களை பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஒய்1 43 இன்ச் டிவி அம்சங்கள் (Infinix Y1 43 inch TV Specifications): இந்த டிவியில் 43 இன்ச் (1920 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் எச்எல்ஜி (HLG) சப்போர்ட் வருகிறது. 16 மில்லியன் கலர் சப்போர்ட் உள்ளது.

இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த டிவியில் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 20W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 2 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 சப்வூப்பர்கள் வருகின்றன. ஆகவே, ஹை-குவாலிட்டி சவுண்ட் (High-quality Sound) எதிர்பார்க்கலாம்.

ஒன்னு இல்ல.. 2 டிவி வாங்கலாம்.. ரூ.13,749-தான்.. 43 இன்ச் எல்இடி டிவி!

இந்த இன்பினிக்ஸ் ஒய்1 43 இன்ச் டிவியில் குவாட் கோர் ப்ராஸசர் (Quad-Core Processor) மற்றும் மாலி ஜி31 ஜிபுயு (Mali G31 GPU) கிராபிக்ஸ் வருகிறது. 4 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. லினக்ஸ் (Linux) ஓஎஸ் வருகிறது. ஆகவே, இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் (Inbuit OTT Apps) கொடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee 5), சோனிலிவ் (Sony LIV), ஈராஸ் நவ் (Eros Now) போன்ற ஆப்கள் சப்போர்ட் உள்ளது. இந்த டிவியில் ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) கொண்டிருக்கிறது. இன்-பில்ட் வை-பை (In-buit Wifi), மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் உள்ளது.

அதேபோல 2 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 1 ஏஆர்சி சப்போர்ட் (ARC Support), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 1 ஆர்எப் இன்புட் (RF Input), 1 ஏவி இன்புட் (AV Input) மற்றும் 1 ஹெட்போன் ஜாக் (Headphone Jack) வருகிறது. அதுமட்டுமல்லாமல், எல்ஏஎன் (LAN) கனெக்டிவிட்டியும் வருகிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த டிவியின் விலை ரூ.15,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,750 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிஸ்கவுண்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த டிவியை வெறும் ரூ.13,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
38 Percent Discount on Infinix Y1 43 inch FHD LED Smart TV in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X