மளமளவென குறைந்த இன்பினிக்ஸ் 4K டிவி விலை.. 16ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. HDR 10.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த 4கே ஸ்மார்ட் டிவி 16ஜிபி ரேம், 40W ஸ்பீக்கர்கள், எச்டிஆர் 10 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இன்பினிக்ஸ் 4கே ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Infinix 43 inch QLED Ultra HD 4K Smart Google TV) மாடலுக்கு 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.16999 விலையில் வாங்கிவிட முடியும்.

இன்பினிக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள்: அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது இன்பினிக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 (HDR 10), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178 degree viewing angle) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
குவாட் கோர் பிராசஸர் (QUAD Core Processor) உடன் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52எம்சி1 (Mali-G52MC1) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்றவற்றை இதில் பயன்படுத்த முடியும். பின்பு நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் போன்ற இன்-பில்ட் ஆப்கள் கொண்டுள்ளன இந்த டிவிகள்.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.
அதேபோல் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 40W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்தது இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி. இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர 3 யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. பின்பு பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications