Home
Gadgets

வீட்டுக்கு 1 இல்ல.. 2 வாங்குவீங்க.. ரூ.25000 பட்ஜெட்ல 50 இன்ச் டிவி.. 40W ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), டால்பி டிஜிட்டல் பிளஸ், அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 40W ஆடியோ அவுட்புட் போன்ற பீச்சர்களுடன் பெசல்-லெஸ் டிசைன் கொண்ட 50 இன்ச் கோடக் சிஏ ப்ரோ டிவி (50 inch KODAK CA PRO TV) பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 38 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 43 இன்ச் டிவி வாங்கும் விலைக்கு 50 இன்ச் டிவி வாங்க வேண்டுமானால், இது பக்கா ஆப்ஷனாகும். இந்த டிவியின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் எப்படி?

32 இன்ச் டிவி வாங்கும் கஸ்டமர்கள் இப்போது, 43 இன்ச் அல்லது 50 இன்ச் டிவிகளை வாங்க தொடங்கிவிட்டனர். ஏனென்றால், மார்கெட்டில் 55 இன்ச் மட்டுமல்லாமல், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் டிவிகளே கம்மியான விலைக்கு களமிறங்க தொடங்கிவிட்டன. இதனால், 43 இன்ச் மற்றும் 50 இன்ச் டிவிகள் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன.

வீட்டுக்கு 1 இல்ல.. 2 வாங்குவீங்க.. ரூ.25000 பட்ஜெட்ல 50 இன்ச் டிவி!

கோடக் சிஏ ப்ரோ டிவி அம்சங்கள் (KODAK CA PRO TV Specifications): இந்த கோடக் டிவியில் அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன் கொண்ட 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. 4K தரத்தில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Filter) இருக்கிறது.

60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. பெசல்-லெஸ் டிசைன் கிடைப்பதால் வியூவிங் அனுபம் பிரீமியமாக கிடைக்கும். வீடியோவை போலவே ஆடியோவிலும் இந்த டிவி பட்டையை கிளப்பி இருக்கிறது. டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) கொண்ட 40W சவுண்ட் அவுட்புட் (Sound Output) கிடைக்கிறது. 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Box Speakers) பேக் செய்துள்ளது.

இந்த கோடக் டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் போட்டோஸ் (Google Photos), கூகுள் குரோம் (Google Chrome) மற்றும் ஜிமெயில் (Gmail) போன்ற ஆப்கள் கிடைக்கிறது. இதுபோக கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் டிவி கிட்ஸ் மோட் (Google TV Kids Mode) கிடைக்கிறது.

மேலும், ஓடிடி ஆப்களான நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ போன்ற ஆப்களும் வருகிறது. கூகுள் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast buit-in), கூகுள் பிளே கேம்ஸ் (Google Play Games) போன்ற சப்போர்ட் உள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1 பில்லியன் கலர் டெப்த் வருகிறது.

ஆகவே, ஓடிடி ஆப்களின் அவுட்புட் பட்ஜெட்டைவிட கூடுதல் பிரீமியமாக இருக்கும். இந்த கோடக் டிவியின் பர்ஃபாமென்ஸ் பொறுத்தவரை குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ53 (Quad Core ARM Cortex A53) சிப்செட் மற்றும் மாலி 450 ஜிபியு (Mali 450 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் உள்ளது. அதேபோல 16 ஜிபி மெமரி வருகிறது.

மேலும், ஏர்பிளே, டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போர்ட் கிடைக்கிறது. இந்த 50 இன்ச் கோடக் சிஏ ப்ரோ டிவியின் விலை பிளிப்கார்ட் விற்பனையில் 38 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அடிமட்ட விலையில் 50 இன்ச் டிவி மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் வேண்டுமானால், இதை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
38 Percent Discount on 50 inch KODAK CA PRO TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X