ஆளுக்கு 1 ஆர்டர்.. 40W ஸ்பீக்கர்கள்.. பெசல் லெஸ் டிசைன்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் ப்ளூபங்க்ட் (Blaupunkt) ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், டால்பி ஆடியோ, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது 43 இன்ச் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் கொண்ட ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 (43CSG7105) மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது.

எனவே 43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் டிவியை ரூ.16249 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் டிவி அம்சங்கள் (43 inch Blaupunkt CyberSound G2 Series TV Specifications): ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே, 1080 x 1920 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. மேலும் விவிட் கலர்ஸ் (vivid colors), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.
ரியல்டெக் (Realtek) பிராசஸர் உடன் இந்த 43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக பல்வேறு புதிய அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
குரோம்காஸ்ட் பில்ட்-இன், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற பல்வேறு அதரவுகளும் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் பெசல்-லெஸ் டிசைன் (Bezel Less Design) மற்றும் 178 வியூ ஆங்கிள் வருவதால், வீடியோ அனுபவம் பிரீமியமாக எதிர்பார்க்கலாம். அதேபோல் டிஸ்பிளே மட்டுமல்லாமல்,ஆடியோவும் மிரளவிடுகிறது.
டால்பி டிஜிட்டல் பிளஸ், டிடிஎஸ் உள்ளிட்ட பலவேறு ஆடியோ அம்சங்கள் கொண்ட 48 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனேவு இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்த டிவியில் ஆடியோ பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ப்ளூபங்க்ட் நிறுவனம்.

நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு முக்கியமான ஆப்ஸ்கள் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் கொண்டுள்ளது இந்த டிவி.
அதாவது வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவு மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது. பின்பு புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த டிவி குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications