ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. டால்பி ஆடியோ.. பெசல் லெஸ் டிசைன்.. Xiaomi டிவிக்கு அதிரடி தள்ளுபடி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களில் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி (Xiaomi) ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சியோமி ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் மாடலுக்கு (Xiaomi A Series 43 inch Smart Google TV 2024 Edition) 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.21499 விலையில் வாங்கிவிட முடியும்.

சியோமி ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் அம்சங்கள் (Xiaomi A Series Smart TV Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் சியோமி ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. அதேபோல் பெசல் லெஸ் டிசைன் உடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டது.
குறிப்பாக விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle)போன்ற அம்சங்களும் இந்த சியோமி ஏ சீரிஸ் டிவியில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
குவாட் கோர் ஏ35 சிபியு (Quad Core A35 CPU) வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் மாடல். குறிப்பாக இந்த சிபியு மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே இந்த டிவியில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
அதேபோல் 8ஜிபி மெமரி மற்றும் 1.5ஜிபி ரேம் உடன் இந்த 43 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் சியோமி டிவி பிளஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களை கொண்டுள்ளது இந்த 43 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ஈஆர்சி (eARC) , ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), யுஎஸ்பி போர்ட் (USB Ports), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளன.


Click it and Unblock the Notifications








