ஸ்மார்ட் பல்பில் சிக்கும் "பெண்" விட்டில் பூச்சிகள்.! விளக்குகளைக் கூட நம்ப முடியாத கலியுகம்.!
இந்த ஸ்மார்ட் பல்புகளை பற்றி அறியாத பெண்கள் மற்றும் சாதாரண மக்கள் விளக்கில் சிக்கிய விட்டில் பூச்சியாய் மாட்டிக்கொள்கின்றனர்.
முக்கிய குலை வழக்கு மற்றும் திருட்டு வழக்குகளில் காவல்துறையினருக்குப் பெரிதும் உதவும் சி.சிடிவி கேமராக்களை மக்கள் அனைவரின் வீடுகளிலும் தற்பொழுது பயன்படுத்தி வருகின்றனர்.

சி.சிடிவி கேமரா பயன்படுத்தும் பழக்கம் சிறிது காலமாகப் பரவலாக பரவி வருகிறது. மக்களின் பாதுகாப்பில் சி.சி.டிவி கேமராவின் பங்கு முக்கியம் அடைந்து வருகின்றது என்பதே உண்மை.

விலை காரணம்
அப்படிப்பட்ட சி.சிடிவி கேமராக்களின் விலை சற்று அதிகமாய் உள்ளதால் அனைவராலும் அதனை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. முக்கியமாய் அதன் விலை காரணமே அதனைப் பயன்படுத்துவதில் சிறிது சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறவேண்டும்.

சி.சிடிவி கேமராவிற்கு நிகரான ஸ்மார்ட் பல்பு
சி.சிடிவி கேமராவிற்கு நிகரான தரமான ஸ்மார்ட் பல்பு தற்பொழுது இந்தியச் சந்தையில் பிரபலமடைந்து வருகின்றது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் பல்புகள் வெறும் ரூ.2,199 என்ற விலை முதல் ரூ.3,000 என்ற விலையில் வரை விற்பனை செய்யப்படுகிறது.

360 டிகிரி எச்.டி கேமரா
இந்த புதிய ஸ்மார்ட் பல்பில் 360 டிகிரி எச்.டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட் பல்பில் வைஃபை, ஆடியோ ஸ்பீக்கர், மைக், மோஷன் டிடெக்டர், ஐ.ஆர் கட், 128 ஜிபி வரையிலான மெமரி கார்டு வசதி மற்றும் ஆர்.ஜி.பி நிறத்தை மாற்றும் சேவை எனப் பல சேவைகளை பட்ஜெட் விலையில் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

வைஃபை மூலம் இயக்கிக்கொள்ளலாம்
இந்த ஸ்மார்ட் பல்புகளை வைஃபை மூலம் இணைத்து உங்களின் ஸ்மார்ட்போனிலிருந்தே எங்கு வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம். சி.சிடிவி கேமரா பல்பின் மையப்பகுதியில் இருப்பதனால் 360 டிகிரியையும் துல்லியமாக ஆடியோவுடன் கவர் செய்கிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட் பல்பு
வீட்டின் பாதுகாப்பிற்காக சி.சிடிவி கேமராக்களை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத பயனர்கள், குறைந்த விலையில் சி.சிடிவி கேமெராவிற்கு நிகரான இந்த ஸ்மார்ட் பல்புகளை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களிலேயே இந்த ஸ்மார்ட் பல்புகள் விற்பனைக்குக் கிடைக்கிறது.

பெண் விடுதிகளில் மற்றும் லாட்ஜ்களில் ஸ்மார்ட் கேமரா
பாதுகாப்பிற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சூப்பர் கூல் கேட்ஜெட்டை, சிலர் தங்களின் சுயநலத்திற்காகத் தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாகப் பல பெண் விடுதிகளில் மற்றும் லாட்ஜ்களில் இந்த வகை ஸ்மார்ட் கேமரா பல்புகளை பயன்படுத்தி பெண்கள் மற்றும் தம்பதியினரின் அந்தரங்களை பதிவு செய்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

விளக்கில் சிக்கிய விட்டில் பூச்சிகள்
ஸ்மார்ட் பல்பு எரியும் பொழுது பல்பின் வெளிச்சத்தினால், அதன் மையப்பகுதியில் உள்ள கேமராவை நமது கண்கள் அடையாளம் காண முடியாமல் போய்விடுகின்றது. இதனால் இந்த ஸ்மார்ட் பல்புகளை பற்றி அறியாத பெண்கள் மற்றும் சாதாரண மக்கள் விளக்கில் சிக்கிய விட்டில் பூச்சியாய் மாட்டிக்கொள்கின்றனர்.

நமது பாதுகாப்பை நாமே விழிப்புடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்
இனி நீங்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜ்களில் பொருத்தப்பட்டிருக்கும் பல்புகளை ஒருமுறை நன்கு உற்று நோக்கிவிட்டு உங்களின் வேலைகளைத் துவங்குங்கள். நமது பாதுகாப்பிற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கேட்ஜெட்டை , நமக்கே ஆபத்தாய் திருப்பும் மனிதர்களும் இங்கு நிறைந்திருக்கிறார்கள். எனவே நமது பாதுகாப்பை நாமே விழிப்புடன் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

உஷார்: கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இடங்களில் ரகசிய கேமராக்கள்.!
இப்போது வரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது, ஆனாலும் குறிப்பிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் பலருக்கும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்று தான் கூற வேண்டும். கேமரா தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக நிறையவே முன்னேறியுள்ளது.
குறிப்பாக இந்திய சந்தைக்கு மிகச்சிறய கேமராக்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் ஸ்பை கேம் உற்பத்தியாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ரிமோட் கண்ட்ரோல், எச்டி வீடியோ, சிறந்த மெமரி கார்டு வசதி ஆகியவற்றை கொண்டு முழுமையான முறையில் தயாரிக்கின்றனர். கீழ் வரும் ஸ்லைடர்களில் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் ஸ்பை கேமராக்களின் புகைப்படங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள். இதை பார்த்து உஷாராகிடுங்க மக்களே.

யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ்
ஸ்பை கேமரா யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தில் எளிமையாக ஸ்பை கேமராவை பொறுத்த முடியும். குறிப்பாக யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தில் இந்த ஸ்பை கேமரா இடம்பெறும்.

ஷவர் ஜெல் ஸ்பை கேமரா:
நாம் பயன்படுத்தும் ஷவர் ஜெல் போன்றவற்றில் ஸ்பை கேமராவை பொறுத்த முடியும். மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியுன் இந்த ஷவர் ஜெல் ஸ்பை கேமரா தயாரிக்கிப்படுகிறது.

WI-FI AC ADAPTER
WI-FI AC ADAPTER சாதனங்களிலும் ஸ்பை கேமரா இருக்கலாம். சட்டையில் அணியும் டைகளிலும் கேமரா இருக்கலாம்.

பாத்ரூம் டிஷ்யூ பாக்ஸ் ஸ்பை கேமரா
பாத்ரூம் டிஷ்யூ பேப்பர் பாக்ஸில் ஸ்பை கேமரா இருக்கலாம். மேலும் எவ்வித பொம்மைகளிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

கிளாக் ரேடியோ ஸ்பை கேமரா
சில கிளாக் ரேடியோ சாதனங்களில் ஸ்பை கேமரா பொறுத்த முடியும். கிளாக் ரேடியோக்கள் வழக்கமாக கைப்பிடிகள், லேபிள்கள் மற்றும் சென்சார்கள்போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

செல்போன் சார்ஜர் ஸ்பை கேமரா
இப்போது வரும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமரா இருக்கலாம். மேலும் இவற்றில் டிவிஆர் போன்று மினி கேமராவாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா
குறிப்பாக அனைத்து நிறுவனங்களிலும் ஸ்மோக் டிடெக்டர் இருக்கும், இவற்றில் ஸ்பை கேமரா பொறுத்த முடியும்.

பேனா ஸ்பை கேமரா
இது அனைவரும் அறிந்ததே, பேனாவிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் ஷூ ஸ்பை கேமரா
சில நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் ஷூ-க்களில் இந்த ஸ்பை கேமரா இருக்கலாம், குறிப்பாக ஸ்பை கேமிரா மாடல்கள் இப்போது மிகவும் எதிர்பாராத வடிவங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications