ஓரமா ஒத்துங்க மொத்தமா.. 250 கிராமில் 100 இன்ச் ஸ்கிரீன்.. கிரிஸ்டல் கிளியர் வீடியோ.. 60 நிமிட பேக்கப்.. மாடல்?
அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் காம்பாக்ட் மாடலான போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 புரொஜெக்டருக்கு (Portronics Pico 14 Projector) தள்ளுபடி கிடைக்கிறது. 250 கிராம் எடை கொண்ட இந்த மாடலில் 100 இன்ச் வரையில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 மாடலின் விவரங்களை பார்க்கலாம்.
இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இதன் விலை ரூ.28,349ஆக இருந்தது. ஆனால், அமேசான் தளத்தில் நேரடி விலை குறைப்பு போக ரூ.25,599 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.23,599 பட்ஜெட்டில் இந்த 100 இன்ச் புரொஜெக்டரை வாங்கி கொள்ளலாம்.

வெறும் 250 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், 100 இன்ச் வரையில் புரொஜெக்சனை கொடுத்துள்ளது. ஆகவே, எங்கு சென்றாலும் கையில் எடுத்து கொண்டு செல்ல முடியும். அதேபோல அவுட்டோரில் எளிதாக பயன்படுத்த முடியும். இன்-பில்ட் பேட்டரி கிடைப்பதால், 60 நிமிடங்களுக்கு வீடியோக்களை பார்த்து கொள்ளலாம்.
போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 புரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Pico 14 Projector Specifications): இந்த பிகோ மாடலில் 60 இன்ச், 80 இன்ச் மற்றும் 100 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். வெறும் 6 அடிக்குள் 60 இன்ச் புரொஜெக்சன் கொடுக்கும். அதேபோல 9 அடிக்குள் 100 இன்ச் புரொஜெக்சனை இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 மாடல் கொடுக்கிறது.
இவ்வளவு சிறிய மாடலாக இருந்தும், ரிமோட் மற்றும் டிரைபாட் கிடைக்கிறது. ஆகவே, ஹேண்டில் செய்ய எளிதாக இருக்கிறது. டிஎல்பி (DLP) லைட் சோர்ஸ் சப்போர்ட் கொடுக்கிறது. மேலும், ஆர்ஜிபி எல்இடி (RGB LED) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, எல்இடி டிவிகளுக்கு நிகரான அவுட்புட்டை இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 மாடலில் எதிர்பார்க்கலாம்.
720p ரெசொலூஷன் கொடுக்கிறது. ஆகவே, ஃபுல்எச்டி (FHD) தரத்தில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். மேலும், 4K என்ஹான்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, கூடுதல் ரெசொலூஷன் கிடைக்கும். இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 புரொஜெக்டரில் 1600 லூமென்ஸ் (Lumens) கொடுக்கப்படுகிறது. இதுபோக ஆட்டோ போகஸ் கிடைக்கிறது.
மேலும், ஆட்டோ கிஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அலைன் (Auto Align) மற்றும் அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screen Mirroring) சப்போர்ட் கிடைக்கிறது. இன்-பில்ட் ஸ்பீக்கர் (in-built Speaker) கொண்டுள்ளது. இதில் 3W சவுண்ட் அவுட்புட்டை பெற்று கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கிடைக்கிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். 60 நிமிடங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 4800mAh பேட்டரி கிடைக்கிறது. இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 4800mAh ஆக இருப்பதால், வேகமாக சார்ஜ் செய்யலாம்.
அதேபோல பவர் பேங்க் இருந்தால் போதும், இதை சார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 புரொஜெக்டரில் எச்டிஎம்ஐ போர்ட் (HDMI) மட்டுமல்லாமல், யுஎஸ்பி ஏ (USB A) மற்றும் யுஎஸ்பி சி (USB C) போர்ட்கள் வருகின்றன. மேலும், வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் இது கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








