Home
Gadgets

வெறும் ரூ.12,499 பட்ஜெட்ல டால்பி ஆடியோ.. பெசல் லெஸ் டிசைன்.. ஆஃபரில் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இந்தியாவில் தரமான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் சாதனங்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி (Infinix 40Y1V QLED TV) மாடக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த டிவியை ரூ.12499 விலையில் வாங்கிவிட முடியும்.

வெறும் ரூ.12,499 பட்ஜெட்ல டால்பி ஆடியோ.. ஆஃபரில் 40 இன்ச் டிவி..

இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Infinix 40Y1V QLED TV Specifications): சக்திவாய்ந்த குவாட் கோர் (quad core) பிராசஸர் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக ஃபுல் எச்டி கியூஎல்இடி டிஸ்பிளே கொண்ட இந்த 40 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 280 நிட்ஸ் பிரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி மாடல். மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio) அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. பின்பு 16W டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவி அசத்தலான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் 4ஜிபி மெமரி வசதியுடன் இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), யூடியூப் (YouTube), ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar), சோனிலிவ் (SonyLIV) போன்ற பல பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி மாடல்.

அதேபோல் இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஆர்எஃப் போர்ட், ஏவி போர்ட், 3.5எமஎம் ஆடியோ ஜாக், ஜிட்டல் ஆப்டிகல் ஆடியோ அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

லினக்ஸ் (Linux) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் டிவி. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் வருகிறது இந்த டிவி. அதாவது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் கிடைக்கிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
36 percent discount on Infinix Y Series 40 inch QLED Smart Linux TV 2025 in Flipkart sale: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X