ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர் போடும் பட்ஜெட்டுக்கு இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கிறது. டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆடியோ, எச்டிஆர் வீடியோ போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை இது கொண்டிருக்கிறது
நம்மில் பலருக்கு 43 இன்ச், 50 இன்ச் என்று பெரிய டிஸ்பிளே கொண்ட டிவி மீது ஆர்வம் இருந்தாலும், சில ரூம்களுக்கு 32 இன்ச் டிவியே நல்ல லுக் கொடுக்கும். அதேபோல பெட்ரூமில் பெரும்பாலும் 32 இன்ச் டிவியை வாங்கி மாட்டவே பலரும் விரும்புகின்றனர். இதனாலேயே 32 இன்ச் டிவிகளுகக்கு இன்னும் மவுசு இருக்கிறது.

இதனால், 32 இன்ச் டிவிகளை கஸ்டமர்களை வாங்க வைக்க ஸ்மார்ட் டிவி தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு பீச்சர்களை கம்மியான பட்ஜெட்டில் கொடுக்கின்றன. ஆனால், இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனமானது, ஒரு படி மேலேயே சென்று ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் கியூஎல்டி டிவியை களமிறக்கி மார்கெட்டையே அதிரவிட்டது.
இப்போது, இந்த டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் 36 சதவீத தள்ளுபடியானது, அந்த டிவியின் விற்பனையை அறக்க பறக்க செய்துள்ளது. ஆர்டருக்கு மேல் ஆர்டர் குவிந்து வருகிறது. இந்த கியூஎல்இடி பீச்சரை தவிர வேறென்ன பீச்சர்கள் இந்த டிவியில் இருக்கிறது. எந்த பேங்க் கார்டுக்கு தள்ளுபடி கிடைக்கிறது உள்ளிட்ட விவரம் பின்வருமாறு.
32 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (32 inch Infinix QLED TV Specification): இதுவொரு இன்பினிக்ஸ் டபுள்யூ1 கியூஎல்இடி டிவி (Infinix W1 QLED TV) மாடலாகும். வெப்ஓஎஸ் (WebOS) கொண்ட ரியல்டெக் குவாட் கோர் (Realtek Quad Core) சிப்செட் கொண்டிருக்கிறது.
இந்த சிப்செட் கேமிங் பிரியர்களுக்கான கேமிங் டாஸ்போர்ட் (Game Dashboard) கொண்டுள்ளது. அதோடு 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருவதால், ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் கிடைக்கிறது. கியூஎல்இடி டெக்னாலஜி (QLED Technology) கொண்டிருக்கிறது. அதோடு 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டிருக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Filter), டிஜிஐ பி3 வைடு கலர் காமட் (DCI-P3 Wide Colour Gamut) மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்டி டிவி (HD TV) சப்போர்ட் உள்ளது.
மேலும், பெசல் லெஸ் டிசைன் (Bezel-less Design) கொண்டிருக்கிறது. ஆகவே, கலர் அக்கியூரசி, ரியல் லைப் விசுவல் ஆகியவை பட்டையை கிளப்பும்படி இருக்கும். இந்த டிவியில் ஐஆர் ரிமோட் (IR Remote) கன்ட்ரோல் வருகிறது. அதோடு வாய்ஸ் கன்ட்ரோல் (Voice Control) சப்போர்ட் உள்ளது. ஆடியோவும் பிரீமியமாக இருக்கிறது.
டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 20W ஸ்பீக்கர்கள் வருகின்றன. வெப்ஓஎஸ் வருவதால், கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro) மற்றும் மல்டிபிள் சவுண்ட் மோட் (Multiple Sound Mode) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, வீடியோவை போலவே ஆடியோ குவாலிட்டியும் மிரளவிடும்படி இருக்கும்.
இந்த டிவியில் எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) போர்ட்கள் வருகின்றன. அதேபோல வை-பை (WiFi), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. ஸ்கிரீன் மிரரிங், ஓடிடி ஆப்ஸ் பயன்படுத்தலாம். இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த டிவியின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,200 தள்ளுபடி உடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் கிடைக்கும் கியூஎல்இடி மாடலாக இந்த 32 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி மட்டுமே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








