பழைய TV காலி.. 300 இன்ச் 4K ப்ரொஜெக்டர்.. ரூ.19,490 க்கு தள்ளுபடி விற்பனை.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
ஈ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் (E Gate Zen 7X Google TV Projector) மாடலுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடியில் கிடைக்கிறது. 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 2 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, குரோம்காஸ்ட் போன்ற கூகுள் டிவியில் கிடைக்கும் ஒட்டுமொத்த பீச்சர்களும் கிடைக்கிறது. ஆனால், அதையே தூக்கி சாப்பிடும்படி 300 இன்ச் ப்ரொஜெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகராக 4K ப்ரொஜெக்டர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் கூகுள் டிவி ஓஎஸ் கொண்ட 4K ப்ரொஜெக்டர்கள் விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றன. ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மட்டுமல்லாமல், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), குரோம்காஸ்ட் (ChromeCast) உள்ளிட்டவை கொடுக்கப்படும்.

ஆகவே, ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகரான அவுட்புட்டை பெற்று கொள்ளலாம். அதே நேரத்தில் ஸ்மார்ட் டிவிகளை விட மலிவான விலைக்கு 300 இன்ச் வரையில் ஸ்கிரீன் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 4K அல்ட்ரா எச்டி கொண்ட மாடல்களாக இருந்தால், ஹோம் தியேட்டர் அனுபவம் கிடைக்கும். இப்படியான பீச்சர்களுடன் ஈ கேட் ஜென் 7எக்ஸ் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் நேரடியாக 35 சதவீத தள்ளுபடி விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.19,490 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு ஈ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் கிடைக்கும்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுத்துள்ளது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் கொண்ட ரிமோட் கிடைக்கிறது. மேலும், கூகுள் ஹோம் (Google Home) உள்ளிட்ட கூகுள் டிவி ஓஎஸ் பீச்சர்கள் ஒட்டுமொத்தமும் கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த ஈ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் கொடுத்து உள்ளது. ரோடேட்டபிள் ஸ்டாண்ட் கிடைக்கிறது. டஸ்ட்ப்ரூப் பாடி மற்றும் 60,000 மணி நேரங்களுக்கான லேம்ப் லைவ் கொடுக்கப்பட்டுள்ளது. லோவ் நாய்ஸ் மாடலாக இருப்பதால், இரவு நேரங்களில் நாய்ஸ்-ப்ரீ அனுபவம் கொடுக்கும் மாடலாகவும் உள்ளது.
ஈ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் அம்சங்கள் (E Gate Zen 7X Google TV Projector Specfications): 300 இன்ச் ஸ்கிரீன் ப்ரொஜெக்சன் கொடுத்து உள்ளது. 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் சப்போர்ட் மற்றும் 1080p நேட்டிவ் ரெசொலூஷன் கொடுத்து உள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஆட்டோ 4டி + 4பி கீஸ்டோன் (Auto 4D + 4P Keystone) கிடைக்கிறது. டால்பி ஆடியோ உள்ளது. ஆகவே, மல்டிபிள் டைரெக்சன் மற்றும் போசிஷன்களில் அட்ஜஸ்ட்மெண்ட் கிடைக்கும்.
360 டிகிரியில் ப்ரொஜெக்சனை செய்து கொள்ள முடியும். அப்ஸ்டபிள் அவாய்டென்ஸ் (Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), 700 ஐஎஸ்ஓ லூமென்ஸ் (ISO Lumens) ஆகியவை இந்த ஈ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி மாடலுக்கு கிடைக்கிறது. வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், எச்டிஎம்ஐ ஏஆர்சி (HDMI ARC), யுஎஸ்பி போர்ட் (USB Port), ஆடியோ அவுட் (Audio Out) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளும் உள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








