Flipkart ஆஃபர் சேல்.. மிட்-ரேஞ்ல 50 இன்ச் மினி LED டிவி.. டால்பி அட்மோஸ்.. அல்ட்ரா எச்டி வீடியோ.. எந்த மாடல்?
கியூஎல்இடி டிவிகளை தூக்கி சாப்பிடும்படியான டிஸ்பிளே மட்டுமல்லாமல், டால்பி அட்மோஸ் ஆடியோ, டால்பி விஷன் வீடியோ, சரவுண்ட் சவுண்ட், 20W ஆடியோ அவுட்புட், மீடியாடெக் சிப்செட், பில்ட்-இன் கிராபிக்ஸ் யூனிட் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட 50 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஸ்பெக்ட்ரா டிவி (50 inch MOTOROLA EnvisionX Spectra TV) டிவி நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஸ்பெக்ட்ரா டிவி மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
கியூஎல்இடி டிவிகளைவிட டிஸ்பிளே பீச்சர்களில் பின்னியெடுக்கும்படி மினி எல்இடி டிவிகள் வருகின்றன. இவை பிரீமியம் மாடல்களாக இருப்பதால், பட்ஜெட்டும் அதிகமாகவே இருக்கும். ஆனால், மோட்டோரோலா நிறுவனம், என்விஷன்எக்ஸ் ஸ்பெக்ட்ரா மினி எல்இடி டிவியை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் களமிறக்கியது. இந்த டிவிக்கு இப்போது டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் விற்பனையில், இந்த ஸ்பெக்ட்ரா மினி எல்இடி டிவியின் விலை ரூ.38,499 ஆக இருக்கிறது. இந்த விலையில் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,750 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். அதேபோல பேங்க் ஆப் பரோடோ டெபிட் கார்டுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் மற்றும் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஆகவே, இந்த என்விஷன்எக்ஸ் ஸ்பெக்ட்ரா மினி எல்இடி டிவியை ரூ.36,749 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு கஸ்டமர்கள் எதிர்பார்க்கும் பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் நிச்சயமாக பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆடியோ, பர்ஃபாமென்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி பீச்சர்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஸ்பெக்ட்ரா டிவி அம்சங்கள் (MOTOROLA EnvisionX Spectra TV Specifications): இந்த மோட்டோ டிவியில் 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி (Mini LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது.
இதுபோக கேமிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும். ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் எம்ஈஎம்சி (MEMC) டெக்னாலஜி கிடைக்கிறது. ஆகவே, மோஷன் எஸ்டிமேஷன் (Motion Estimation), கலர் & கான்ட்ராஸ்ட் என்ஹான்ஸ்மெண்ட் (Color & Contrast Enhancement) பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், 140 லோக்கல் டிம்மிங் சப்போர்ட், டெம்ப்ரேச்சர் ஆப்ஷன் உள்ளது.
லோவ் ப்ளூ லைட் ஃபில்டர்களும் கிடைக்கின்றன. ஆகவே, டிஸ்பிளேவில் குறையில்லாதபடி பிரீமியம் குவாலிட்டி அவுட்புட் கிடைக்கும். இந்த வீடியோ பீச்சர்களுக்கு ஏற்ப டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) டெக்னாலஜி கொண்ட 20W ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. குவாட் கோர் மீடியாடெக் சிப்செட் (Quad Core MediaTek Chipset), 2 ஜிபி ரேம் வருகிறது.
மேலும், 16 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-built Graphics Unit) கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. அதேபோல ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சப்போர்ட் மொபைல் கனெக்டிவிட்டி கொடுக்கிறது. ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), வை-பை (Wi Fi), ப்ளூடூத் (Bluetooth), எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) போன்ற வழக்கமான கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








