Home
Gadgets

ஆளுக்கு 2 ஆர்டர் கன்ஃபார்ம்.. வெறும் ரூ.899 க்கு 35 மணி நேரம் பிளேபேக்கை வழங்கும் இயர்பட்ஸ் அறிமுகம்!

இதுவரை இயர்பட்ஸ் (Earbuds) வாங்காதவர்களை கூட ஆளுக்கு 2 வாங்க வைக்கும் விலையில், இந்திய சந்தையில் ஒரு புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இது 35 மணிநேரம் என்கிற "நம்பமுடியாத" பிளேபேக் டைமை வழங்கும் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸும் ஆகும்!

நாம் இங்கே பேசுவது, பிரபல உள்நாட்டு நிறுவனமான பிட்ரானின் (Ptron) லேட்டஸ்ட் தயாரிப்பான பிட்ரான் பேஸ்பாட்ஸ் ஃப்ளேர் (Ptron Basspods Flare) இயர்பட்ஸை பற்றித்தான். இதில் 35 மணிநேரம் என்கிற பிளேபேக் டைம் மட்டுமே சிறப்பம்சம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்; இன்னும் நிறைய இருக்கிறது!

வெறும் ரூ.899 க்கு 35 மணி நேரம் பிளேபேக்கை வழங்கும் இயர்பட்ஸ்!

Ptron Basspods Flare விலை, விற்பனை, கலர் ஆப்ஷன்ஸ்:

வழக்கம் போல பிட்ரான் நிறுவனத்தின் இந்த இயர்பட்ஸும், அதன் விற்பனை கூட்டாளியான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது.

ரூ.899 க்கு விற்பனை செய்யப்படும் பிட்ரான் பேஸ்பாட்ஸ் ஃப்ளேர் இயர்பட்ஸ் மொத்தம் மூன்று கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது: பிளாக், ப்ளூ மற்றும் யெல்லோ.

Ptron Basspods Flare இயர்பட்ஸில் உள்ள முக்கியமான 3 விஷயங்கள்!

பிட்ரான் பேஸ்பாட்ஸ் ஃப்ளேரின் ஒவ்வொரு இயர்பட்ஸிலும் 13மிமீ டைனமிக் ட்ரைவர்ஸ் உள்ளது. பிட்ரான் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ட்ரைவர்ஸ் கேமிங்கிற்கான சிறந்த மற்றும் சக்திவாய்ந்த பேஸை வழங்கும்!

மேலும் இந்த இயர்பட்ஸ் ட்ரூடாக் தொழில்நுட்பத்துடன் (TruTalk technology) வருகின்றன. இது நாய்ஸ்-கேன்சலேஷனை (Noise-cancellation) உறுதி செய்கிறது!

இது 40எம்எஸ் என்கிற அளவிலான மிகவும் குறைந்த லோ லேடன்சியை (Low Latency) வழங்குவதற்காக ஆப்ட்சென்ஸ் தொழில்நுட்பத்தையும் (AptSense technology) கொண்டுள்ளது. ஆக அதிதீவிரமான மொபைல் கேமிங்கின் போது உங்களுக்கு எந்த விதமான "முன்-பின்" தொந்தரவும் இருக்காது!

Ptron Basspods Flare இயர்பட்ஸ் முழுதாக சார்ஜ் ஆக எவ்வளவு நேரமாகும்?

சார்ஜிங் கேஸையும் சேர்த்து பிட்ரான் பேஸ்பாட்ஸ் ஃப்ளேரின் இயர்பட்ஸை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 35 மணிநேர மொத்த பிளேபேக் டைம் கிடைக்கும்.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த இயர்பட்ஸ் யூஎஸ்பி- டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன. ஆக இந்த இயர்பட்ஸை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் ஒரு மணிநேரமும், சார்ஜிங் கேஸை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 1.5 மணிநேரம் மட்டுமே ஆகும்!

Ptron Basspods Flare இயர்பட்ஸின் ப்ளூடூத் வெர்ஷன் என்ன?

இது ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உடன் வருகிறது. அதுமட்டுமின்றி தடையற்ற கனெக்டிவிட்டிக்காக எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) கோடெக்குகளையும் ஆதரிக்கின்றன.

இன்னும் ஒருபடி மேலே செல்லும்படி, பிட்ரானின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் கூகுள் அசிஸ்டென்ட் (Google Assistant) அல்லது சிரி (Siri) ஏஐ வாய்ஸ் அசிஸ்டென்ட்டிற்கான ஆதரவையும் கொண்டுள்ளன.

Ptron Basspods Flare இயர்பட்ஸ் வாட்டர் ப்ரூப் திறன் கொண்டதா?

இது வியர்வை அல்லது நீர் துளிகளை எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்4 ரேட்டிங்கை கொண்டுள்ளது. அதாவது எந்த திசையில் இருந்தும் வரும் நீர் துளிகளை மட்டுமே எதிர்க்கும், சமாளிக்கும்!

இந்த இயர்பட்ஸில் வேறு என்னென்ன ஸ்பெஷல்?

இந்த இயர்பட்ஸ் அற்புதமான லைட்-வெயிட் டிசைனை பெற்றுள்ளன. ஒவ்வொரு இயர்பட்ஸுன் எடையும் வெறும் 3.5 கிராம் மட்டுமே உள்ளது.

சூப்பர் ஹீரோ தீமின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ் ஆர்ஜிபி லைட்ஸ் உடன் வருகிறது மற்றும் மல்டி-ஃபங்க்ஷன் டச் கன்ட்ரோலையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ptron Brand Launched New TWS Earbuds Under Rs 1000 in India Check Out Ptron Basspods Flare Price and Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X