Home
Gadgets

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. டால்பி அட்மாஸ்.. 16 மெமரி.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Thomson Phoenix QLED Ultra HD (4K) Smart Google TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி டால்பி விஷன், 16ஜிபி மெமரி, 40W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல் சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு தற்போது 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

தாம்சன் Phoenix 43-இன்ச் டிவி அம்சங்கள் (Thomson Phoenix 4K Smart TV Specifications): 3840 × 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன், உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி 4கே டிவி மாடல். குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த மீடியாடடெக் எம்டி9602 (MT9602) பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த அசத்தலான தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டு இந்த தாம்சன் Phoenix 43-இன்ச் டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். மேலும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
தாம்சன் நிறுவனம்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி தரமான ஆடியோ அமைப்புடன் வெளிவந்துள்ளது. அதன்படி டால்பி அட்மாஸ்(Dolby Atmos), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurround) ஆதரவு கொண்ட 40W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.

இந்த தாம்சன் டிவியில் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த தாம்சன் Phoenix 43-இன்ச் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இந்த ரிமோட்டில் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
34 percent discount on Thomson Phoenix 43 inch QLED 4K TV in Flipkart sale: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X