இன்னைக்கு பளிப்கார்ட் பிச்சுக்கும்.. ரூ.14,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி..
கோடாக் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன. இந்நிலையில் கோடாக் நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2024 எடிஷன்-க்கு (KODAK Full HD LED Smart Linux TV 2024 Edition) 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவி ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த கோடாக் டிவியை மிகவும் கம்மி விலையில் வாங்கிவிட முடியும். மேலும் கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவியின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி அம்சங்கள் (KODAK Smart Linux TV Specifications): 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் இந்த அசத்தலான கோடாக் 43-இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் (400 nits Brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த கோடாக் டிவி.
மாலி குவாட்-கார்டு GPU இன்ஜின் மற்றும் அம்லாஜிக் (Amlogic) சிப்செட் ஆதரவுடன் இந்த கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2024 எடிஷன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.
512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அசத்தலான கோடாக் டிவி. மேலும் லினக்ஸ் ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்கும். நெட்பிளிக்ஸ் (Netflix) பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி+ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த கோடாக் 43-இன்ச் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரவுண்ட் சவுண்ட் ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2024 எடிஷன் வெளிவந்தது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான கோடாக் ஸ்மார்ட் டிவி மாடல்.

மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த அசத்தலான கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏஆர்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
அதேபோல் கோடாக் நிறுவனம் கூடிய விரைவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் டிவிகள் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளன.


Click it and Unblock the Notifications








