Home
Gadgets

கனவுல வராத ஆஃபர்.. பட்ஜெட்ல 55 இன்ச் 4K டிவி.. DOLBY அட்மோஸ்.. 16GB மெமரி.. 24W ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, 24W ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், மெட்டல் ஃபிரேம்லெஸ் டிசைன் கொடுக்கும் 55 இன்ச் ஒனிடா நெக்ஸ்ஜி டிவிக்கு (55 inch ONIDA NEXg TV) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டர் செய்ய கிடைக்கும் இந்த ஒனிடா டிவியின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

55 இன்ச் ஒனிடா நெக்ஸ்ஜி டிவி அம்சங்கள் (55 inch ONIDA NEXg TV Specifications): இந்த ஒனிடா டிவி 55UIG-R மாடலாகும். 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே, அல்ட்ரா எச்டி 4K ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 (HDR10), டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. இதுபோக பிக்சா விசுவல் என்ஜின் (Pixa Visual Engine) மற்றும் எச்எல்ஜி (HLG) கிடைக்கிறது.

கனவுல வராத ஆஃபர்.. பட்ஜெட்ல 55 இன்ச் 4K டிவி.. DOLBY அட்மோஸ்.. மாடல்?

மேலும், எம்இஎம்சி (MEMC) மற்றும் ஒனிடாவின் ஐ புரொடெக்ட் பிளஸ் மோட் (Eye Protect Plus Mode) வருகிறது. ஆகவே, வீடியோ அனுபவம் பட்ஜெட்டை விட கூடுதல் அவுட்புட் கொடுக்கும். இந்த டிவியின் ஆடியோவை பார்க்கையில், 24W சவுண்ட் அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்களுக்கு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது.

அதேபோல டால்பி சரவுண்ட் சவுண்ட் (Dolby Surround Sound) கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ பீச்சர்களுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்களை பார்க்க முடிகிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஒனிடா நிறுவனத்தின் நெக்ஸ்ஜி (NexG) சிப்செட் கிடைக்கிறது. இந்த 55 இன்ச் ஒனிடா நெக்ஸ்ஜி டிவிக்கு 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் வருவதால், குரோம்காஸ்ட், கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் மீட், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற கூகுள் ஆப்கள் மற்றும் பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், ஆப்பிள் டிவி போன்ற அனைத்து ஓடிடி ஆப்களும் அணுக கிடைக்கின்றன. ஒனிடா நெக்ஸ் கேம் (Onida Nexg Cam) சப்போர்ட் கிடைக்கிறது.

கனவுல வராத ஆஃபர்.. பட்ஜெட்ல 55 இன்ச் 4K டிவி.. DOLBY அட்மோஸ்.. மாடல்?

ஆகவே, சிசிடிவிகளை நேரடியாக பயன்படுத்தலாம். இந்த 55 இன்ச் ஒனிடா நெக்ஸ்ஜி டிவி கனெக்டிவிட்டியை பார்க்கையில் 1 யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) கிடைக்கிறது. ஆடியோ அவுட், கேமிங் கன்சோல், ஆடியோ / வீடியோ போன்ற வழக்கமாக கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. வை-பை ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் சப்போர்ட் இருக்கின்றன.

55 இன்ச் ஒனிடா நெக்ஸ்ஜி டிவி விலை (55 inch ONIDA NEXg TV Price): இவ்வளவு பீச்சர்களை கொண்ட இந்த டிவியின் விலை ரூ.30,990ஆக இருக்கிறது. இந்த விலை 34 சதவீத டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. இதுபோக எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card), எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு (SBI Bank Credit) ஆகியவற்றுக்கு ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.19,740 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். ஃபுல் மெட்டல் ஃபிரேம்லெஸ் டிசைன் கொடுக்கிறது. ஆகவே, பிரீமியம் லுக் எதிர்பார்க்கலாம். பிளாக் கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொடுக்கப்படுகிறது. 1 வருட வாரண்டி பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்களையே கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
34 Percent Discount on 55 inch ONIDA NEXg Google TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X