வெளுக்குது டிவி விற்பனை.. வெறும் ரூ.20999 போதும்.. 43 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. 4K வீடியோ.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) தளத்தில் 43 இன்ச் கியூஎல்இடி டிவிகளுக்கு பிரைம் டே விற்பனைக்கு (Prime Day Sale) முன்னதாகவே பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. 34 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.22,000 பட்ஜெட்டில் 43 இன்ச் கியூஎல்இடி டிவி (43 inch QLED TV) ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்படி 2 கியூஎல்இடி டிவிகள் நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கின்றன. இந்த டிவிகளின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த அமேசான் விற்பனையில் 43 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவிக்கு 34 சதவீத டிஸ்கவுண்ட் மற்றும் 43 இன்ச் தோஷிபா கியூஎல்இடி டிவிக்கு 40 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, மேலும் மலிவான விலையில் இந்த டிவிகளை ஆர்டர் செய்து கொள்ளலாம். முதலில் பீச்சர்களை பார்ப்போம்.

43 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (43 inch Blaupunkt QLED TV Specifications): இதுவொரு குவாண்டம் டாட் சீரிஸ் (Quantam Dot Series) மாடல் டிவியாகும். இந்த டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கிஎல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4K எச்டிஆர் (HDR) போன்ற டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurround) மற்றும் சைபர்சவுண்ட் ஜென்2 (CyberSound Gen2) டெக்னாலஜி போன்ற ஆடியோ பீச்சர்கள் இருக்கின்றன. 60W ஆடியோ அவுட்புட் வருகிறது.
இந்த 43 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவிக்கு கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது. ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), இன்-பில்ட் வை-பை (In-Built WiFi), ஈதர்நெட் (Ethernet), எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் யுஎஸ்பி (USB) உள்ளிட்ட கனெக்டிவிட்டி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த டிவிக்கு ஒரு வருட வாரண்டி வருகிறது. இப்போது அமேசான் தளத்தில் 34 சதவீத டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.22,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் எஸ்டிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதற்கு ஈஎம்ஐ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால், ரூ.1250ஆக தள்ளுபடி குறைக்கப்படும்.
43 இன்ச் தோஷிபா கியூஎல்இடி டிவி அம்சங்கள் (43 inch Toshiba QLED TV Specifications): முந்தைய மாடலைவிட கூடுதல் பீச்சர்களை இந்த டிவி கொண்டிருக்கிறது. அதற்கேற்ப விலையும் அதிகமாக இருக்கிறது. இதுவொரு சி450 சீரிஸ் (C450 Series) டிவியாகும். 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே, 4K ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
டால்பி விஷன், 3டி டிஜிட்டல் காம்ப் பில்டர், வைடு கலர் காமட் போன்ற டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட 24W ஆடியோ அவுட்புட் வருகிறது. அமேசான், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட், ஏர்பிளே, விஆஆர் லோவ் லேட்டன்சி, ஏஐ பிக்சர் குவாலிட்டி உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன.
வை-பை, யுஎஸ்பி, ஈதர்நெட் மற்றும் எச்டிஎம்ஐ கனெக்டிவிட்டி வருகிறது. இந்த டிவியின் விலை 40 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.27,999ஆக இருக்கிறது. இப்போது எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1250 தள்ளுபடியுடன் ரூ.26,749 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் வாங்க ஈஎம்ஐ ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








