Home
Gadgets

இதுக்கு மேல குறைக்க முடியாது.. 24W ஸ்பீக்கர்கள்.. 8GB ஸ்டோரேஜ்.. ஆஃபரில் சியோமி டிவி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால், பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவருகின்ற சியோமி ஸ்மாரட் டிவிகள். எனவே தான் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் அதிகளவு விற்பனை வருகின்றன.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது சியோமி நிறுவனத்தின் எம்ஐ 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

இதுக்கு மேல குறைக்க முடியாது.. ஆஃபரில் சியோமி டிவி.. எந்த மாடல்?

எனவே சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலை அமேசானில் ரூ.18499 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக இந்த டிவி தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Xiaomi MI 5A Series Smart TV specifications): இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் இந்த வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

தரமான கார்டெக்ஸ் ஏ55 64-பிட் குவாட் கோர் பிராசஸர் (Cortex A55 64-bit Quad Core) உடன் சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக Vivid பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இதில் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (Android 11) இயங்குதளம் மூலம் எம்ஐ 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. மேலும்கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் (Chromecast) ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது. குறிப்பாக இந்த டிவியில் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

இதுக்கு மேல குறைக்க முடியாது.. ஆஃபரில் சியோமி டிவி.. எந்த மாடல்?

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவுடன் 24W ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த 40-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. அதாவது Quick Mute, Quick wake பட்டன்கள் உள்ளன. இதுதவிர மற்றும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற ஷார்ட்கட் கீ உள்ளன. மேலும் புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
33 Percent Discount on Xiaomi MI 5A Series Full HD Smart TV in Amazon Sale Check Specs Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X