ஓல்டு TV கதை முடிந்தது.. 33 சதவீத ஆஃபரில் 32 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
வீட்டில் இருக்கும் பழைய டிவிகளை ஓரமாக வைத்துவிட்டு, புதிய ஸ்மார்ட் டிவி வாங்க வைக்கும்படியான தள்ளுபடி விலைக்கு பிலிப்ஸ் நிறுவனத்தின் மாடல்கள் கிடைக்கின்றன. இதில் பிலிப்ஸ் 32 இன்ச் 6100 சீரிஸ் ஃபிரேம்லெஸ் டிவி (PHILIPS 32 inch 6100 Series Frameless TV) நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு வந்துள்ளது. இந்த டிவியின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 33 சதவீத தள்ளுபடி விலைக்கு பிலிப்ஸ் 32 இன்ச் 6100 சீரிஸ் ஃபிரேம்லெஸ் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (PHILIPS 32 inch 6100 Series Frameless HD Smart LED Google TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டு, எச்டிஎப்டி கிரெடிட் கார்டு போன்ற குறிப்பிட்ட கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, கூடுதல் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோவை ரூ.15,000 பட்ஜெட்டில் கொடுப்பதால், யூசர் அனுபவம் ப்ரீமியம் டிவிகளுக்கு நிகராக இருக்கும். ஆனால், பீச்சர்கள் பிரீமியமாக இருக்காது. இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை பேக் செய்துள்ளது?
பிலிப்ஸ் 32 இன்ச் 6100 சீரிஸ் ஃபிரேம்லெஸ் டிவி அம்சங்கள் (PHILIPS 32 inch 6100 Series Frameless TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைப்பதால், குரோம் காஸ்ட் (Chrome Cast) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.
கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த பிலிப்ஸ் 32 இன்ச் 6100 சீரிஸ் ஃபிரேம்லெஸ் டிவி இருக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. ஆகவே, லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். லோக்கல் ஆடியோ, வீடியோ ஃபைல்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ள முடியும். பில்ட்-இன் வை-பை (In-Built Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஐ கேர் (Eye Care) சப்போர்ட் கொண்ட 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த பிலிப்ஸ் 32 இன்ச் 6100 சீரிஸ் ஃபிரேம்லெஸ் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கொடுத்துள்ளது. எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்கள் பேக் செய்யப்பட்டு இருக்கின்றன.
24W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பட்ஜெட்டிலும் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த பிலிப்ஸ் 32 இன்ச் 6100 சீரிஸ் ஃபிரேம்லெஸ் டிவி கிடைக்கிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) உள்ளது. எல்ஏஎன், ஆடியோ ஜாக், ஏவி உள்ளிட்ட போர்ட்களும் உள்ளது.


Click it and Unblock the Notifications