பெட்ரூமுக்கே 55 இன்ச் டிவி.. வெறும் ரூ.28000 போதும்.. 4K டிவி.. டால்பி ஆடியோ.. 40W அவுட்புட்.. எந்த டிவி?
55 இன்ச் டிவியை பட்டையை கிளப்பும் தள்ளுபடியில் வாங்க காத்திருக்கும் கஸ்டமர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வெறும் ரூ.28,000 பட்ஜெட்டுக்கு 4K ரெசொலூஷன், டால்பி அட்மோஸ் கொண்ட கூகுள் டிவி நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கிறது.
டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், டால்பி விஷன், அல்ட்ரா எச்டி, எச்டிஆர்10 பிளஸ், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சப்போர்ட் போன்ற பட்ஜெட்டை விட கூடுதலாக பீச்சர்களும் வருகின்றன. இது எந்த டிவி? பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் விற்பனை விவரங்கள் என்ன? உள்ளிட்ட முழு விவரம் இதோ.

தாம்சன் ஓபி மேக்ஸ் 4கே டிவி அம்சங்கள் (Thomson OP MAX 4K TV Specifications): இந்த டிவியில் 55 இன்ச் (3840 × 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 550 நிட்ஸ் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஸ்ட்ரீம் 4கே (Stream 4K) சப்போர்ட் உள்ளது.
டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 பிளஸ் (HDR 10+) வருகிறது. ஸ்போர்ட்ஸ் மோட், மூவி மோட், கேமிங் மோட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, வீடியோ குவாலிட்டி பக்கா பிரீமியமாக இருக்கும். அதேபோல ஆடியோவிலும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 40W ஸ்பீக்கர்கள் வருகின்றன.
மேலும், டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurround) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதிலும் ஸ்டாண்டர்ட், மியூசிக், மூவி மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன. 2 பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது. ஆகவே, ஆடியோ அனுபவம், மினி தியேட்டர் லெவலுக்கு எதிர்பார்க்கலாம்.

இந்த தாம்சன் ஓபி மேக்ஸ் 4கே டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் டிவி கிட்ஸ் மோட் (Google TV Kids Mode), கூகுள் டியோ (Google Duo), குரோம்காஸ்ட் இன்-பிலட் (Chromecast In-built) வருகிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் உள்ளது. இந்த டிவியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், யுஎஸ்பி (USB), எச்டிஎம்ஐ (HDMI), ஏர்பிளே (AirPlay), ஈதர்நெட் (Ethernet), வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல ஸ்கிரீன் மிரரிங் (Sreen Mirroring) சப்போர்ட் வருகிறது.
இந்த தாம்சன் டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி வருகிறது. ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) வருகிறது. இந்த ரிமோட்டில் இன்டர்நெட் சப்போர்ட் வருகிறது. பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-Less Design) டிசைன் கொண்டிருக்கிறது. அலாய் ஸ்டான்ட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் வருகிறது.
மாலி 450 கிராபிக்ஸ் மற்றும் குவாட்-கோர் ப்ராஸசர் வருகிறது. இந்த தாம்சன் ஓபி மேக்ஸ் 4கே டிவியின் விலை ரூ.29,999 ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, இந்த டிவியை ரூ.28,749 பட்ஜெட்டில் வாங்கலாம். இந்த டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications