இதுதான் பட்ஜெட்.. ரூ.21000 பட்ஜெட்ல 43 இன்ச் கியூஎல்இடி டிவி.. டால்பி ஆடியோ.. வாய்ஸ் அசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
ரூ.21,000 தான்பா பட்ஜெட், இந்த விலைக்கு ஏத்த மாதிரி பீச்சர்கள் இருந்தா போதும், அதே சமயம் நல்லவும் இருக்குற மாதிரி கியூஎல்இடி டிவி இருந்தா சொல்லுங்கனு கேட்கும் கஸ்டமர்களுக்கு டால்பி ஆடியோ, 4K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ், 8ஜிபி மெமரி, வெப்ஓஎஸ் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல் ஃபிரேம்லெஸ் (Frameless) டிசைன் கொண்ட 43 இன்ச் விடபுள்யூ கியூஎல்இடி டிவியானு (43 inch VW QLED TV) பக்கா ஆப்ஷாக இருக்கும். இந்த விடபுள்யூ டிவி குறித்த விவரங்கள் இதோ.
43 இன்ச் விடபுள்யூ டிவி அம்சங்கள் (43 inch VW TV Specifications): இந்த டிவி VW43QUW1 மாடலாகும் ஃபிரேம்லெஸ் டிசைனில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன், 4K எச்டிஆர் (HDR), எச்டிஆர்10பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG) எம்ஈஎம்சி (MEMC) பீச்சர்கள் வருகின்றன.

1.1 பில்லியன் கலர் டெப்த், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 4K அப்ஸ்கேலிங் (Upscaling), ஏஎம்ஓ டெக்னாலஜி (AMO Technology) மற்றும் 94 சதவீத டிசிஐ பி3 கலர் காமட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் நல்ல டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த 43 இன்ச் விடபுள்யூ டிவியின் ஆடியோவை பார்க்கையில் 30W அவுட்புட் வருகிறது.
டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் உள்ளது. இந்த டிவியில் வெப்ஓஎஸ் டிவி (webOS TV) வருகிறது. குவாட் கோர் ரியல்டெக் (Quad Core RealTek) சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கு டிஸ்பிளே செட்டிங்ஸ் செய்து கொள்ளும் விதமாக கேம் டாஸ்போர்ட் (Game Dashboard) சப்போர்ட் வருகிறது. 1.5 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
இந்த வெப்ஓஎஸ் மூலம் நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLiv), ஆப்பிள் டிவி (Apple TV) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ள முடியும். அதேபோல மிராகாஸ்ட் (Miracast), ஆப்பிள் மியூசிக் (Apple Music) சப்போர்ட் உள்ளது.
மேலும், ஆப்பிள் ஏர்பிளே (Apple Air Play), ஆப்பிள் ஹோம் (Apple Home) சப்போர்ட் வருகிறது. இந்த கியூஎல்இடி டிவியில் தின்கியூ ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (ThinQ AI Voice Assistant) வருகிறது. ஆகவே, வாய்ஸ் கன்ட்ரோல் (Voice Control) கொண்ட மேஜிக் ரிமோட் (Magic Remote) வருகிறது. அலெக்சா சப்போர்ட் உள்ளது.
இந்த 43 இன்ச் விடபுள்யூ டிவியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஆப்டிகல் அவுட்புட் (Optical Output) மற்றும் ஈதர்நெட் (Ethernet) சப்போர்ட் வருகிறது. ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) ஆகிய வயர்லெஸ் கனெக்டிவிட்டி வருகிறது.
இந்த பட்ஜெட்டிலும் முடிந்தவரை பெரும்பாலான பீச்சர்களை பேக் செய்துள்ளது. கூகுள் அல்லது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மட்டுமே குறைவாக இருக்கிறது. இருப்பினும் பட்ஜெட்டுக்கு வொர்த்தாகவே இருக்கிறது. இந்த கியூஎல்இடி டிவியின் விலை 33 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.21,999ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








