பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 1.. ரூ.22,499-க்கு 43 இன்ச்.. ஆஃபரில் QLED டிஸ்பிளே டிவி.. 50W ஆடியோ.. எந்த மாடல்?
43 இன்ச் டிவி இல்லனா, 55 இன்ச் டிவி ஆஃபரில் கம்மி விலைக்கு கிடைச்சா வாங்கனும், இப்படி திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு ப்ளூபங்க்ட் (Blaupunkt) நிறுவனத்தின் குவாண்டம் டாட் கியூஎல்இடி டிவிகள் (Quantum Dot QLED TV) பக்காவாக இருக்கும். இந்த டிவிகள் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டிஸ்கவுண்ட்டில் கிடைக்கின்றன. 43 இன்ச் மற்றும் 55 இன்ச் ப்ளூபங்க்ட் டிவிகளில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்கின்றன? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எப்படி உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ப்ளூபங்க்ட் குவாண்டம் டாட் கியூஎல்இடி டிவிகளில் ஆடியோ சிஸ்டம் கூடுதல் அவுட்புட் கொடுக்கும்படி இருக்கின்றன. அதாவது 4 ஸ்பீக்கர்களுடன் 50W ஆடியோ அவுட் கிடைக்கும். 55 இன்ச் டிவியில் 60W ஆடியோ அவுட் கிடைக்கும். இந்த பீச்சர்கள் இந்த மாடல்களில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

43 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (43 inch Blaupunkt QLED TV Specifications): இந்த ப்ளூபங்க்ட் டிவி குவாண்டம் டாட் சிரீஸ் (43QD7050) மாடலாகும். ஃபிரேம் லெஸ் டிசைனில் (Frame-less Design) 43 இன்ச் (3840 × 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 550 நிட்ஸ் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), எச்டிஆர்10பிளஸ் (HDR10), எச்எல்ஜி (HLG) போன்ற பட்ஜெட்டில் குறையில்லாதபடி டிஸ்பிளே பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, 4K ரெசொலூஷனில் வீடியோ அவுட்புட் கிடைக்கும். கலர் வால்யூம் மற்றும் பிரைட்னஸ் என்ஹான்ஸ்மெண்ட் கிடைக்கிறது. இதுபோக எம்இஎம்சி (MEMC) சப்போர்ட் உள்ளது.
ஆகவே, டிஸ்பிளேவில் பக்காவாகவே பீச்சர்கள் இருக்கின்றன. இப்போது, ஆடியோவை பார்க்கலாம். இந்த 43 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவியில் 4 ஸ்பீக்கர்களுடன் 50W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. இந்த ஆடியோவுக்கு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மட்டுமல்லாமல், கூடுதலாக டால்பி டிஜிட்டல் (Dolby Digital), டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் கிடைக்கிறது.
இதுபோக பிரத்யேகமாக சைபர்சவுண்ட் ஜென் 2 (CyberSound Gen 2) டெக்னாலஜி மூலம் சூப்பர் சவுண்ட் கிளாரிட்டி (Super Sound Clarity), டைனாமிக் காலிபிரேடட் சவுண்ட் (Dynamic Calibrated Sound) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டில் மற்ற டிவிகளுடன் ஒப்பிடுகையில் இந்த டிவியின் ஆடியோ பீச்சர்கள் பரவால்லையே என்று சொல்லும்படியே இருக்கிறது.
ஓடிடி ஆப்கள், கேம்கள், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்றவற்றுக்கு கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் கிட்ஸ் மோட் (Google Kids Mode) போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 43 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி வருகிறது.
எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஈதர்நெட், வை-பை, ப்ளூடூத், ஸ்கிரீன் மிரரிங் போன்ற போர்ட் மற்றும் வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் வருகின்றன. இந்த டிவியின் விலை டிஸ்கவுண்ட் போக ரூ.22,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யலாம். ஒருவேளை 55 இன்ச் டிவி வேண்டுமானால், இதே சிரீஸில் 55 இன்ச் மாடல் இருக்கிறது.
55 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (55 inch Blaupunkt QLED TV Specifications): இந்த டிவியில் பெரும்பாலான பீச்சர்கள் மேற்கண்ட டிவியை போலவே இருக்கிறது. இருப்பினும், 60W ஆடியோ மற்றும் தண்டரஸ் சவுண்ட் (Thunderous Sound) சப்போர்ட் கூடுதலாக இருக்கிறது. இந்த 55 இன்ச் டிவியின் விலை டிஸ்கவுண்ட் போக ரூ.31,999ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








