Home
Gadgets

வெறும் ரூ.15,499 போதும்.. 40W ஸ்பீக்கர்கள்.. பெசல்-லெஸ் டிசைன்.. ஆஃபரில் 43-இன்ச் டிவி.. விட்றாதீங்க..

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது இயர் எண்ட் சேல் (Year End Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முனன்ணி நிறுவனங்களின் ஸ்மர்ட் டிவிகள் மிகவும் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் இந்த பிளிப்கார்ட சிறப்பு விற்பனை டிசம்பர் 16 (நாளை) நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஸ்மார்ட் டிவிக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அசத்தலான 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.15,499 விலையில் வாங்க முடியும்.

வெறும் ரூ.15,499 போதும்.. ஆஃபரில் 43-இன்ச் டிவி.. விடாதீங்க..

அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடியும் உள்ளது. மேலும் இப்போது 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன் (Thomson World Cup Full HD LED Smart Linux TV 2023 Edition) மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன் ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி 16:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இதுதவிர இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளேவில் 178 டிகிரி வியூ ஆங்கிள் (View Angle), விவிட் (Vivid) கலர்ஸ் உள்ளிட்ட பல்வேற சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.

பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி குவாட் கோர் அம்லாஜிக் பிராசஸர் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

4ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512எம்பி ரேம் வசதியுடன் 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் லினக்ஸ் ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பிரைம் வீடியோ(Amazon Prime Video), யூடியூப் (Youtube),சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

வெறும் ரூ.15,499 போதும்.. ஆஃபரில் 43-இன்ச் டிவி.. விடாதீங்க..

40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். மேலும் வைஃபை, மிராகாஸ்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன் ஆனது மிகவும் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் தாம்சன் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 percent discount on Thomson World Cup Smart TV on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X