Home
Gadgets

அள்ளி தந்த பிளிப்கார்ட்.. 24W ஸ்பீக்கர்கள்.. 8GB ஸ்டோரேஜ்.. ஆஃபரில் 43 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் கோடாக் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கார்டெக்ஸ் பிராசஸர், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த கோடாக் ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ((43UHDX7XPRO) மாடலுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.17,999 இருந்தால் வாங்கிவிட முடியும்.

அள்ளி தந்த பிளிப்கார்ட்.. ஆஃபரில் 43 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி..

கோடாக் 7எக்ஸ் ப்ரோ 43 இன்ச் டிவி அம்சங்கள் (KODAK 7X Pro 43 inch LED TV Specifications): 4K அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். குறிப்பாக ஒடிடி மூலம் படம் பார்க்கும் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். தரமான பிக்சல் குவாலிட்டி வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவி.

அதேபோல் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவியின் டிஸ்பிளே. மேலும் விவிட் கலர்ஸ் (vivid colors), ஹை-பிரைட்னஸ் (High Brightness) சப்போர்ட், 178 டிகிரி வியூ ஆங்கிள் ( 178-degree viewing angle) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

சக்திவாய்ந்த ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 (ARM Cortex-A53) பிராசஸர் உடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ டிவி ஆனது ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ டிவி வெளிவந்துள்ளது. பின்பு பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஆப் வசதிகளை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் கேமிங் வசதிக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.

2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ டிவி. மேலும் 4கே எச்டிஆர் 10 (4K HDR 10) அம்சமும் இதில் உள்ளன. எனவே மிகவும் தெளிவான படங்களை இதில் நாம் பார்க்க முடியும். குறிப்பான இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.

அள்ளி தந்த பிளிப்கார்ட்.. ஆஃபரில் 43 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி..

ஸ்மார்ட் ரிமோட் ஒன்று இதனுடன் வருகிறது. அதாவது சோனி லிவ், பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். அதேபோல் இந்த 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதற்காக 24 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

கனெக்டிவிட்டி பொறுத்தவரை புளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் ஆகியவை உள்ளன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் பட்ஜெட் விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறது இந்த கோடாக் 4K ஸ்மார்ட் டிவி. மேலும் விரைவில் கோடாக் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Percent Discount on KODAK 7X Pro 43 inch LED TV in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X