Home
Gadgets

யார்யா நீங்கெல்லாம்.. ரூ.15499 பட்ஜெட்ல 40W ஸ்பீக்கர்கள்.. டால்பி ஆடியோ.. HDR 10.. ஆஃபரில் QLED டிவி..

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் கியூஎல்இடி (QLED) ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 40W ஸ்பீக்கர்கள், எச்டிஆர் 10, டால்பி ஆடியோ உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Infinix QLED Full HD Smart Google TV) மாடலுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை 15499 விலையில் வாங்கிவிட முடியும்.

யார்யா நீங்கெல்லாம்.. HDR 10.. ஆஃபரில் QLED டிவி..

இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள்: இந்த 43-இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 (HDR 10), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குவாட் கோர் பிராசஸர் (QUAD Core Processor) உடன் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி 470 ட்ரிபிள் கோர் (Mali470 Triple Core) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

இதுதவிர பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். அதேபோல் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.

யார்யா நீங்கெல்லாம்.. HDR 10.. ஆஃபரில் QLED டிவி..

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 40W பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்தது இந்த 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல்.

3 யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன.

Best Mobiles in India

English summary
32 percent discount on Infinix 43 inch QLED Smart Google TV in Flipkart sale: Check Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X