ரூ.10,000 க்கும் இருக்கு.. ரூ.30,000 க்கும் இருக்கு.. 3 வெவ்வேறு நிறுவனங்களின் 7 புதிய Smart TV-கள் அறிமுகம்!
டிசிஎல் (TCL) நிறுவனத்தின் சப்-பிராண்டான ஐஃபால்கான் (iFFALCON) நம்ப முடியாத பட்ஜெட் விலையில் எஸ்53 (S53) என்கிற புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கூடவே ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் ஐடெல்லும் (itel) கூட ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தத்தம் புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளன.
ஒருவேளை நீங்கள் ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவியை (Latest Smart TV) வாங்கும் தேடலில் இருந்தால்.. குறிப்பாக உங்கள் பட்ஜெட் ரூ.11,000 க்குள் அல்லது ரூ.22,000 க்குள் அல்லது ரூ.29,000 க்குள் இருந்தால்.. நீங்கள் இந்த 7 புதிய ஸ்மார்ட் டிவிகளையுமே நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

01. ஐஃபால்கான் எஸ்53 (iFFALCON S53): இது அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த புதிய ஐஃபால்கான் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியானது ஒரு 32-இன்ச் மாடலாகும். பெஸல்லெஸ் டிஸைனுடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி எச்டிஆர்10 ஆதரவையும் கொண்டுள்ளது.
மேலும் இது AIPQ இன்ஜின், மைக்ரோ டிம்மிங் உடனான எச்டி ரெசல்யூஷன் பேனல், டால்பி ஆடியோவால் ட்யூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர்ஸ், ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS), ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் பல ஓடிடி ஆப்களுக்கான ஆதரவு, ப்ளூடூத் 5.0, இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்ஸ் மற்றும் 1 யூஎஸ்பி 2.0 போர்ட் போன்றவைகளை வழங்குகிறது.
02.ஒன்பிளஸ் டிவி ஒய்1ஸ் 40-இன்ச் டிவி (OnePlus TV Y1S 40): இந்த மாடல் ஒன்பிளஸ் டிவியின் ஒய்1எஸ் சீரீஸில் உள்ள 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களுக்கு இடையே அமர்கிறது. இது ரூ.21,999 க்கு ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் வழியாக ஏப்ரல் 14 முதல் விற்பனைக்கு வரும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, நீங்கள் பார்க்கும் கன்டென்ட்டின் அடிப்படையில் கலர் மற்றும் ஆடியோவை மேம்படுத்தும் காமா இன்ஜின், ஏஐ அடிப்படையிலான ரியல்டைம் இமேஜ் ஆப்டிமைசேஷன் இன்ஜின், டூயல்-பேண்ட் வைஃபை, மீடியாடெக் MT9216 சிப்செட், 1ஜிபி ரேம், 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.
மேலும் இது நெட்பிளிக்ஸ், ப்ரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூட்யூப் மற்றும் பல ஓடிடி ஆப்களுக்கான ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), டால்பி ஆடியோவுடனான 20W ஸ்பீக்கர்ஸ், கூகுள் அசிஸ்டெண்ட், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், 2 எச்டிஎம்ஐ 2.0, 2 யூஎஸ்பி டைப்-சி போர்ட்ஸ், ப்ளூடூத் 5.0 போன்றவைகளையும் பேக் செய்கிறது.
03. ஐடெல் ஜி-சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் (Itel G-series Smart TVs): இந்த சீரீஸின் கீழ் மொத்தம் 5 மாடல்கள் அறிமுகமாகி உள்ளன : ஜி4366 (43 இன்ச்), ஜி5066 (50 இன்ச்), ஜி5566 (55 இன்ச்) ஜி3265 (32 இன்ச்) மற்றும் ஜி4365 (43 இன்ச்). இவற்றின் விலைகள் முறையே ரூ.21,999, ரூ.28,999 ரூ.33,999. ரூ.10,999 மற்றும் ரூ.18,999. மேற்கண்ட அனைத்து புதிய ஐடெல் ஸ்மார்ட் டிவிகளுமே ஐடெல் இணையதளம் வழியாக வாங்க கிடைக்கின்றன.
முதலில் பார்த்த 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்கள் 4கே அல்ட்ரா எச்டி டிவிகளாகும். இவைகள் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஏஆர்எம் ஏ53 1.5GHz குவாட் கோர் ப்ராசஸர், 2ஐபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ், வைஃபை, ப்ளூடூத், க்ரோம்காஸ்ட், 1 x ட்யூனர், 3 x எச்டிஎம்ஐ போர்ட்ஸ், 2 x யூஎஸ்பி போர்ட்ஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.
கடைசியாக உள்ள 32-இன்ச் மற்றும் 43-இன்ச் மாடல்கள் ஃபுல் எச்டி பிளஸ் டிவிகளாகும். இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ், ஏஆர்எம் ஏ55 1.5GHz குவாட் கோர் ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications